ஆன்லைன் மோசடியிலிருந்து தப்பிக்க வழி: எஸ்.பி,, அறிவுரை| Dinamalar

ஆன்லைன் மோசடியிலிருந்து தப்பிக்க வழி: எஸ்.பி,, அறிவுரை

Updated : மே 15, 2022 | Added : மே 15, 2022 | கருத்துகள் (3) | |
மதுரை-வங்கியிலிருந்து பேசுவதாகக்கூறி ஏமாற்றுவோரிடம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.ஆன்லைன் வேலைவாய்ப்பு வாக்குறுதியைநம்பி முன் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம் என மதுரை எஸ்.பி., பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன் 2021 மார்ச்சில் துவக்கப்பட்டது. கூடுதல் எஸ்.பி., மணி, இன்ஸ்பெக்டர் சார்மிங் எஸ்.ஒய்ஸ்லின், போலீசார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை-வங்கியிலிருந்து பேசுவதாகக்கூறி ஏமாற்றுவோரிடம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.ஆன்லைன் வேலைவாய்ப்பு வாக்குறுதியைநம்பி முன் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம் என மதுரை எஸ்.பி., பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.latest tamil newsமதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன் 2021 மார்ச்சில் துவக்கப்பட்டது. கூடுதல் எஸ்.பி., மணி, இன்ஸ்பெக்டர் சார்மிங் எஸ்.ஒய்ஸ்லின், போலீசார் பணிபுரிகின்றனர்.அலைபேசி காணாமல்போன பல வழக்குகள்மாவட்டத்திலுள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவாகின. ஒரு மாதத்தில் சைபர் கிரைம் மூலம் ரூ. 7லட்சத்து 500 மதிப்புள்ள 40 அலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

உரியவர்களிடம் எஸ்.பி.,பாஸ்கரன் வழங்கினார்.இதுவரை ரூ.97 லட்சத்து 4 ஆயிரத்து 850 மதிப்புள்ள 696 அலைபேசிகள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.வங்கிகளிலிருந்து பேசுவதாகக்கூறி வங்கி கணக்கை தெரிந்து கொண்டு, நுாதனமாக பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்டவர்களிடம்ரூ.24 லட்சத்து 95 ஆயிரத்து 168 மீட்கப்பட்டது. உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

எஸ்.பி.,கூறியதாவது:வங்கியிலிருந்து பேசுவதாகக்கூறி ஏமாற்றுவோரிடம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். ரகசிய எண், வங்கி கணக்கு எண், சி.வி.வி., மற்றும் ஓ.டி.பி.,யை முன்பின் தெரியாதவரிடம் கொடுத்து ஏமாற வேண்டாம். பண இரட்டிப்பு வாக்குறுதி அளிக்கும்முதலீட்டு செயலிகள் (Investment App), ஆன்லைன் வேலைவாய்ப்பு வாக்குறுதியை நம்பி முன் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். குறைந்த தொகைக்கு அதிக வட்டி பெறும் ஆன்லைன் செயலிகளிடம் பணம் பெற்று ஏமாற வேண்டாம்.


latest tamil news


தெரியாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ அழைப்புகளில் பேச வேண்டாம். ரிமோட் அக்சஸ் செயலிகளை (Any desk, Team Viewer)பதிவிறக்கம் செய்ய வேண்டாம். இதனால் பணத்தை இழந்தால் 1930 இலவச எண், https://www.cybercrime.gov.in இணையதளத்தில் 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம் என்றார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X