நம்பிக்கை!  55 ஊராட்சிகளை தன்னிறைவாக மாற்ற திட்டம்;

Added : மே 15, 2022
Advertisement
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், 55 ஊராட்சிகளை தன்னிறைவாக மாற்ற, வேளாண் வளர்ச்சி திட்டத்தில், அனைத்து துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் விதமாக மானியம், இலவச திட்டங்களை செயல்படுத்தி, அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர்,


செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், 55 ஊராட்சிகளை தன்னிறைவாக மாற்ற, வேளாண் வளர்ச்சி திட்டத்தில், அனைத்து துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் விதமாக மானியம், இலவச திட்டங்களை செயல்படுத்தி, அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார் மலை ஆகிய ஒன்றியங்களில், 358 ஊராட்சிகள் உள்ளன.இந்த ஊராட்சிகளில் முதற்கட்டமாக, 2021 - -22ம் ஆண்டிற்கு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 55 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன.தொடர்ந்து, மேற்கண்ட ஊராட்சிகளில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், பல துறைகள் சார்பாக பல திட்டங்கள் செயல்படுத்தி, தன்னிறைவு ஊராட்சியாக மாற்றும் திட்டம் துவங்கியுள்ளது.

இது தொடர்பான ஊரக வளர்ச்சி, வேளாண், வருவாய் உள்ளிட்ட பல துறை அதிகாரிகள், கடந்த 10ம் தேதி ஆய்வு கூட்டம் நடத்தினர். அதில், விவசாயம் மற்றும் அது சார்ந்த பணிகளை மேம்படுத்துவது, விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு வளம் சேர்க்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து, அதிகாரிகள் கலந்து ஆலோசித்தனர்.

ஊராட்சிகளில் உள்ள தரிசு நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு, விளை நிலமாக மாற்றப்பட உள்ளது. அதற்காக கிணறு, ஆழ்துளை கிணறு, நுண்ணீர் பாசனம், சூரிய சக்தி 'பம்ப் செட்'டுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன.வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துதல், கால்நடைகளின் நலன் காத்து, பால் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.வருவாய் துறை மூலம், விவசாயிகளுக்கு புதிய பட்டா, பட்டா மாறுதல் செய்யும் பணியும் செயல்படுத்தப்பட உள்ளது.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிகளவு பயிர்க் கடன்கள் வழங்க, விவசாயிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.நெட்டை தென்னங்கன்று, வரப்பு பயிர் துவரை, உளுந்து, பச்சைப்பயறு, தட்டைப்பயறு விதைகள் மானியத்தில் வழங்கப்படுகின்றன.பயிர் பாதுகாப்பு கருவிகள், கைத்தெளிப்பான், விசைத்தெளிப்பான் கருவிகள் மானியத்தில் வழங்கப்படுகின்றன.வீட்டுத் தோட்டம், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்ய ஊக்கத்தொகை தரப்படுகிறது.

பிளாஸ்டிக் கூடைகள் மற்றும் பயிர் பாதுகாப்பு செய்ய, பிளாஸ்டிக் உருளை வினியோகம். விவசாயிகளின் வருமானத்தை பெருக்க, வயல்வெளிகளில் வரப்பு ஓரங்களில் பழச்செடிகள், மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் கிணறுகள் அமைத்து தரப்படுகிறது. பண்ணைக்குட்டைகள் அமைக்க, 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது

ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுபாசன குளங்கள், ஊருணிகள், குளங்கள் மற்றும் வரத்து கால்வாய்களை துார்வாரி மேம்படுத்த, பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன.இந்த திட்டங்களை, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 55 ஊராட்சிகளில் முறையாக செயல்படுத்தினால், விவசாயிகளின் வாழ்வு வளமாகும் என, விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.வேளாண் இணை இயக்குனர் சுரேஷ் கூறியதாவது:கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் 55 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இங்கு, அனைத்து துறையினர் ஒன்றுணைந்து, வளர்ச்சி பணிகளை செயல்படுத்த உள்ளனர்.இந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை கண்காணிக்க, மாவட்ட கலெக்டர் தலைவராகவும், வேளாண் இணை இயக்குனர் உறுப்பினர் செயலராகவும், ஏழு துறைகளின் அலுவலர்களை உறுப்பினர்களாகவும் உடைய மாவட்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.இயற்கை விவசாயம் செய்ய, விவசாயிகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இத்திட்டப் பணிகள் விரைவில் துவக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.முன்வர வேண்டும்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை வரவேற்கிறேன். வீடுகளுக்கு மாடி தோட்டம், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு பயன் உள்ள திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களை மக்களுக்கு முழுமையாக தெரியப்படுத்த, அதிகாரிகள் முன்வர வேண்டும்.வ.வே.காந்தி, ஊராட்சி தலைவர், வல்லம்

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சிகள்

அச்சிறுப்பாக்கம் ஒன்றியம்: பெரும்பாக்கம், வேடந்தாங்கல், தின்னலுார், வெள்ளபுத்துார், கரிக்கிளி, வடமணிப்பாக்கம், மொரப்பாக்கம், வேலமூர், அன்னங்கால், கிளியாநகர்.மதுராந்தகம் ஒன்றியம்: வையாவூர், கீழக்கண்டை, கிணார், முன்னுாத்திகுப்பம், அண்டவாக்கம், காவாதுார், மாமண்டூர், சிலாவட்டம், புக்கத்துறை. சித்தாரமூர் ஒன்றியம்: சூணாம்பேடு, வன்னியநல்லுார்,

சித்தார்காடு, நெற்குணம், போந்துார்.லத்துார் ஒன்றியம்: செய்யூர், கடலுார், முகையூர், நெடுமரம், கொடூர், நெல்வாய்பாளையம். திருக்கழுக்குன்றம் ஒன்றியம்: விட்டிலாபுரம், வடகடம்பாடி, சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம், வாயலுார், கொத்திமங்கலம், லட்டூர், மணமை.திருப்போரூர் ஒன்றியம்: தையூர், கோவளம், நென்மேலி, பையனுார், முட்டுக்காடு,

பட்டிபுலம், பெந்தண்டலம்.காட்டாங்கொளத்துார் ஒன்றியம்: மேலமையூர், ஆலப்பாக்கம், திம்மாவரம், ஊரப்பாக்கம், வல்லம், வண்டலுார்.புனிததோமையார் மலை ஒன்றியம்: முடிச்சூர், மேடவாக்கம், பொழிச்சலுார், கோவிலம்பாக்கம்.திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு

வேளாண் - உழவர் நலத்துறை: நெட்டை தென்னை கன்றுகள், வரப்பில் பயறு வகைகள், கைத்தெளிப்பான், விசைத்தெளிப்பான் உள்ளிட்டவை வழங்க, 32.45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை: வீட்டுத் தோட்டம், தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்ய ஊக்கத்தொகை, பிளாஸ்டிக் கூடைகள் மற்றும் பிளாஸ்டிக் டிரம், விவசாயிகளின் வருமானத்தை பெருக்க வயல்வெளி வரப்பு ஓரங்களில் பழச்செடிகள் மற்றும் மரக்கன்றுகள் நடுவது உள்ளிட்ட பணிகளுக்கு, 21.38 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் பொறியியல் துறை: 23 ஊராட்சிகளில் தரிசு நிலங்களை மேம்படுத்த, ஆழ்துளை கிணறு மற்றும் கிணறு அமைக்க, 1.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற ஊராட்சிகளில், குளம் துார் வாரி சீரமைக்கிறது.அனைத்து துறையினருக்கும், அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியில், 80 சதவீதம் பணிகளை ஊராட்சிகளில் செயல்படுத்தி, தன்னிறைவு பெற வேண்டும்.
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X