குன்றத்துார் தொழிலதிபர் வீட்டில்100 சவரன் நகைகள் கொள்ளை

Added : மே 15, 2022
Advertisement
குன்றத்துார் : குன்றத்துாரில், தோல் தொழிற்சாலை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து, 100 சவரன் நகைகள் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை, அனகாபுத்துார் புறவழிச்சாலையின் அணுகு சாலையை ஒட்டி, 'அம்சா லெதர்ஸ்' என்ற பெயரில், தோல் தொழிற்சாலை நடத்தி வருபவர் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆசாத், 42.இவர், குடும்பத்தினருடன் குன்றத்துாரை அடுத்த
குன்றத்துார் தொழிலதிபர் வீட்டில்100 சவரன் நகைகள் கொள்ளை


குன்றத்துார் : குன்றத்துாரில், தோல் தொழிற்சாலை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து, 100 சவரன் நகைகள் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.



சென்னை, அனகாபுத்துார் புறவழிச்சாலையின் அணுகு சாலையை ஒட்டி, 'அம்சா லெதர்ஸ்' என்ற பெயரில், தோல் தொழிற்சாலை நடத்தி வருபவர் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆசாத், 42.இவர், குடும்பத்தினருடன் குன்றத்துாரை அடுத்த மணிகண்டன் நகரில் உள்ள மூன்று மாடி குடியிருப்பில், 2012ம் ஆண்டு முதல் வசிக்கிறார்.ஆசாத், கடந்த 8ம் தேதி மனைவி மானசா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பெங்களூரு சென்றார்.

அங்கிருந்து, நேற்று அதிகாலை 2:00 மணிக்கு, சென்னை திரும்பினார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்த நிலையில் இருந்தது.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசாத், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து விசாரணை நடத்தினர். சோதனையில், பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், லாக்கரை உடைத்து, 100 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர்.

தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து, 100 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து வழக்கு பதிந்த குன்றத்துார் போலீசார், தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X