புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Added : மே 15, 2022
Advertisement
திருத்தணி : உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி, திருத்தணி தளபதி கே.வினாயகம் மகளிர் கல்லுாரியின் நாட்டு நலப் பணி திட்ட மாணவியர், புகையிலை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் ஊர்வலம் நேற்று நடந்தினர்.கல்லுாரி தாளாளர் எஸ்.பாலாஜி தலைமை வகித்தார். முதல்வர் வேதநாயகி வரவேற்றார். இதில், திருத்தணி சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஏழுமலை பங்கேற்று, கலை
புகையிலை  ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


திருத்தணி : உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி, திருத்தணி தளபதி கே.வினாயகம் மகளிர் கல்லுாரியின் நாட்டு நலப் பணி திட்ட மாணவியர், புகையிலை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் ஊர்வலம் நேற்று நடந்தினர்.கல்லுாரி தாளாளர் எஸ்.பாலாஜி தலைமை வகித்தார். முதல்வர் வேதநாயகி வரவேற்றார்.

இதில், திருத்தணி சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஏழுமலை பங்கேற்று, கலை நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.அதை தொடர்ந்து, 300க்கும் மேற்பட்ட மாணவியர், திருத்தணி நகரில் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் புகையில் ஒழிப்பு குறித்து கோஷம் எழுப்பியும், துண்டு பிரசுரம் வழங்கியும் சென்றனர்.நிகழ்ச்சியில், கல்லுாரி துணை முதல்வர் பொற்செல்வி, பள்ளி முதல்வர் விநாயகம், துணை முதல்வர் சுமதி உட்பட பலர் பங்கேற்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X