முதன் முறையாக இரட்டை வேடம்
நீண்ட இடைவெளிக்கு பின், நடிகை பாவனா சாண்டல்வுட்டுக்கு வந்துள்ளார். ரக்ஷன் இயக்கும் இப்படத்துக்கு பிங்க் நோட் என, பெயர் சூட்டப்பட்டுள்ளது. பணத்தின் பின்னால் ஓடினால், என்னென்ன விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்பதே கதையின் சாராம்சம். இதில் நாயகியாக நடிக்கும் பாவனா கூறுகையில், ''முதன் முறையாக, இரண்டு வேடங்களில் நடிக்கிறேன். 2010ல் மங்களூரில் நடந்த, உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு, திரைக்கதை பின்னப்பட்டுள்ளது.
நடுத்தர வர்க்கத்து குடும்பத்தை சேர்ந்த அக்கா, தங்கையாக நான் நடிக்கிறேன். நடிப்புக்கு வாய்ப்புள்ள கதாபாத்திரம்,'' என்றார்.சகுந்தலை கதாபாத்திரம்நடிகை ஐஷானி ஷெட்டி நாயகியாக நடிக்கும், தரணி மண்டல மத்யதொளகே திரைப்படம், திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. தற்போது படப்பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கதை பற்றி ஐஷானி ஷெட்டியிடம் கேட்ட போது, ''முதன் முறையாக, சகுந்தலை கதாபாத்திரம் போஸ்டர் வெளியிடப்பட்டது. நான் இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. கதையை கேட்கும் போதே, கன்னட திரையுலகுக்கு மாறுபட்ட, மற்றொரு படம் கிடைக்கப்போகிறது
என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். படம் திரைக்கு வரும் நாளை, நானும் ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்," என்றார்.குடும்ப பின்னணி கதை இளம் நடிகர் சித்தார்த் மகேஷ், 2016ல் திரைக்கு வந்த சிப்பாயி திரைப்படம் மூலம், திரையுலகில் நுழைந்தவர். ஆறு ஆண்டுகளுக்கு பின், கருடா வாயிலாக மீண்டும் வந்துள்ளார். இது மே 20ல் திரைக்கு வருகிறது. இப்படத்துக்கு திரைக்கதை எழுதியது இவர்தான். படத்தின் கதை தொடர்பாக, அவர் கூறுகையில், ''குடும்ப பின்னணி கொண்ட கதை இதுவாகும். சர்ஜிகல் ஸ்டிரைக், ரூபாய் நோட்டு தடை என, பல விஷயங்களை முன் வைத்து, கதை எழுதினேன். இதை கொரியோகிராபர் தனுகுமாரிடம் காண்பித்த போது, அவர் இயக்க சம்மதித்தார். கொரோனாவால் படம் தாமதமானது. இதில் நடிகர் ஸ்ரீநகர் கிட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்,'' என்றார்.வௌிநாட்டில் விற்பனைநடிகர் சுதீப் நடித்த, விக்ராந்த் ரோனா திரைப்படம், திரைக்கு வருவதற்கு முன்பே, வெளிநாட்டு மார்க்கெட்டில் பெருந்தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.
3டி தொழில்நுட்பத்தில், ஜூலை 8ல் உள்நாடு, வெளி நாடுகளில் இப்படம் திரைக்கு வருகிறது. அதற்கு முன்பே படத்தின் வினியோக உரிமையை, வெளிநாட்டு நிறுவனமொன்று, 10 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் தயாரிப்பாளர் ஜாக் மஞ்சு குஷியடைந்துள்ளார். படக்குழுவினர் கூறுகையில், ''எங்கள் படத்தின் கதை, ஒரு மொழி அல்லது ஒரு நாட்டை சார்ந்தது அல்ல. உலகம் முழுவதும் பொருந்தக்கூடிய கதை. வெளியாவதற்கு முன்பே, வெளி நாட்டு நிறுவனம் படத்தின் வினியோக உரிமை வாங்கியுள்ளது,'' என்றார்.
மீண்டும் கைகோர்ப்புஇயக்குனர் பிரேம், நடிகர் துருவா சர்ஜா காம்பினேஷனில் தயாராகும் படத்துக்கு, அர்ஜுன் ஜன்யா இசையமைக்கிறார். இதற்கு முன் பிரேம் இயக்கிய தி வில்லன், ஏக் லவ்யா திரைப்படங்களுக்கு, அர்ஜுன் ஜன்யா இசையமைத்திருந்தார். இரண்டு படங்களும் வெற்றி படங்களாகின. பாடல்கள் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது. தற்போது மூன்றாவது படத்தில் பணியாற்றுகிறார்.பிரேம் கூறுகையில், ''அர்ஜுன் ஜன்யா, மீண்டும் என்னோடு இணைந்துள்ளது, மகிழ்ச்சியான விஷயம்,'' என்றார்.
ரொமான்டிக், திரில்லர்நடிகை மான்விதாவை பற்றி, எந்த தகவலும் வெளியாகவில்லையே என, ரசிகர்களின் கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. சேகர் இயக்கத்தில், நகுல் கவுடா நாயகனாக நடிக்கும் படத்துக்கு, மான்விதா நாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சேகர் இயக்கத்தில் நடிக்கும் முதல் படம். படக்குழுவினர் கூறுகையில், ''இந்த படம் ரொமான்டிக், திரில்லர் கதை. படத்தின் டைட்டில் உட்பட, மற்ற விபரங்களை விரைவில் வெளியிடுவோம். அனைத்தும் முடிவு செய்த பின், படப்படிப்பு துவங்கும்,'' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE