மதுரை-மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று துவங்கிய அரசு பொருட்காட்சி 45 நாட்கள் நடக்கிறது.பொருட்காட்சியை அமைச்சர்கள் சாமிநாதன், மூர்த்தி, தியாகராஜன் துவக்கி வைத்தனர். அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:திருவிழா நகரான மதுரையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ஆண்டுதோறும் அரசு பொருட்காட்சி நடத்தப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளால் 2 ஆண்டுகளாக பொருட்காட்சி நடைபெறவில்லை. தற்போது துவங்கியுள்ளது 212 வது பொருட்காட்சியாகும்.செய்தி மக்கள் தொடர்புத்துறை, வருவாய், ஊரக வளர்ச்சி, வேளாண்மை, பள்ளிக் கல்வி, அறநிலையத்துறை உட்பட 27 அரசுத்துறைகளின் அரங்குகள், மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட அரசு சார்பு நிறுவன அரங்குகள், விடுதலைப் போரில் தமிழகம், திருக்குறளின் பெருமையை விளக்கும் குறளோவிய கண்காட்சி அரங்குகள் இடம் பெற்றுள்ளன.பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. 45 நாட்கள் தினமும் மாலை 4:00 முதல் இரவு 10:00 மணிவரை நடைபெறும். நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.10 என்றார்.செய்தித்துறை இயக்குனர் ஜெயசீலன், கலெக்டர் அனீஷ் சேகர், மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், கமிஷனர் கார்த்திகேயன், எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, வெங்கடேசன், பூமிநாதன், செய்தித்துறை இணை இயக்குனர் செல்வராஜ், டி.ஆர்.ஓ., சக்திவேல் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE