நகரி : சித்துார் மாவட்டம், புத்துார் அடுத்த, கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பேத்கர், 43. இவர், நகரி அடுத்த, நின்ற கிராம காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம், காவலர் அம்பேத்கர், தலைமை காவலர் கிருஷ்ணமூர்த்தி, மற்றொரு காவலர் அரி ஆகிய மூவரும் இரவு ரோந்து பணிக்காக, மகேந்திரா ஜீப்பில் சென்றனர்.ஜீப்பை காவலர் அம்பேத்கர் ஒட்டினார். நகரி - நின்ற கிராம சாலையில் சென்று கொண்டிருந்தபோது, வளைவு ஒன்றின் அருகே, குறுக்கே நாய் ஒன்று திடீரென ஓடி வந்தது.
அதன் மீது மோதாமல் இருக்க, ஓட்டுனர் திருப்பிய போது, கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையோர முட்புதரில் உள்ள மின் கம்பத்தின் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.இதில், பலத்த காயம் அடைந்த காவலர் அம்பேத்கர், சம்பவ இடத்திலேயே இறந்தார். இரண்டு காவலர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.இறந்த காவலர் அம்பேத்கர் குடும்பத்தினருக்கு, சித்துார் மாவட்ட எஸ்.பி., ரீசாந்த்ரெட்டி, ஒரு லட்சம் ரூபாய் நிவாரணமும், ஈமச்சடங்கிற்காக, 25 ஆயிரம் ரூபாயும் வழங்கி ஆறுதல் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE