நகரி கோவிலில் இன்று கருட சேவை

Added : மே 15, 2022
Advertisement
நகரி : நகரி கரியமாணிக்க பெருமாள் கோவிலில், இன்று, கருட சேவை உற்சவம் நடைபெறுகிறது.சித்துார் மாவட்டம், நகரி டவுனில் அமைந்துள்ளது பூநீலாதேவி சமேத கரியமாணிக்க பெருமாள் கோவில். இக்கோவில், திருப்பதி திருமலை தேவஸ்தானம் இணை கோவிலாக செயல்பட்டு வருகிறது.இக்கோவிலில், காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் நடைபெறுவதை ஒட்டி, இக்கோவிலிலும் வழக்கமாக ஒவ்வொரு



நகரி : நகரி கரியமாணிக்க பெருமாள் கோவிலில், இன்று, கருட சேவை உற்சவம் நடைபெறுகிறது.சித்துார் மாவட்டம், நகரி டவுனில் அமைந்துள்ளது பூநீலாதேவி சமேத கரியமாணிக்க பெருமாள் கோவில். இக்கோவில், திருப்பதி திருமலை தேவஸ்தானம் இணை கோவிலாக செயல்பட்டு வருகிறது.

இக்கோவிலில், காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் நடைபெறுவதை ஒட்டி, இக்கோவிலிலும் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும், அதே தினத்தில் கருட வாகன சேவை வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், இன்று, அதிகாலை 5:00 மணிக்கு மூலவர், தாயார் மற்றும் ஆண்டாள் ஆகிய சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறும்.பின், காலை 7:00 மணிக்கு உபயதேவியாருடன் கரியமாணிக்க பெருமாள் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் கருட வாகன சேவை எழுந்தருளி, நகரி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X