பெங்களூரில் அதிகரிக்கும் டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை

Added : மே 15, 2022
Advertisement
பெங்களூரு : கொரோனாவிலிருந்து சிறிது, சிறிதாக மீளும் பெங்களூரில், டெங்கு காய்ச்சல் பரவுவது, சுகாதார அதிகாரிகளுக்கு தலைவலியாக மாறியுள்ளது.இரண்டு ஆண்டுகளாக, வாட்டி வதைத்த கொரோனா தொற்று, படிப்படியாக குறைகிறது. மக்கள் நிம்மதியடைந்த நிலையில், டெங்கு காய்ச்சல் பரவுகிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிட்டால், இம்முறை டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பெங்களூரில்


பெங்களூரு : கொரோனாவிலிருந்து சிறிது, சிறிதாக மீளும் பெங்களூரில், டெங்கு காய்ச்சல் பரவுவது, சுகாதார அதிகாரிகளுக்கு தலைவலியாக மாறியுள்ளது.இரண்டு ஆண்டுகளாக, வாட்டி வதைத்த கொரோனா தொற்று, படிப்படியாக குறைகிறது. மக்கள் நிம்மதியடைந்த நிலையில், டெங்கு காய்ச்சல் பரவுகிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிட்டால், இம்முறை டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

பெங்களூரில் முந்தைய ஆண்டு, 1,800 பேர் டெங்குவால் பாதிப்படைந்தனர். நடப்பாண்டு 2,000 பேர் பாதிப்படைந்து, மருத்துவமனையில் சேர்ந்தனர்.வரும் நாட்களில், நோயாளிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இரண்டு மாதமாக, மண்டல அளவில் டெங்கு அதிகரிக்கிறது. குறிப்பாக பெங்களூரு கிழக்கு மண்டலத்தில், 653 நோயாளிகள் மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை பெற்றனர்.பொம்மனஹள்ளியில் 104; தாசரஹள்ளியில் 38; தெற்கு மண்டலத்தில் 170; மேற்கு மண்டலத்தில் 162; மகாதேவபுராவில் 342, ஆர்.ஆர்.நகரில் 122, எலஹங்காவில் 202 பேர் டெங்கு காய்ச்சலுக்கு ஆளாகினர்.பெங்களூரு முழுவதும், டெங்கு அதிகரிப்பதை தீவிரமாக கருதும், பெங்களூரு மாநகராட்சி தொற்றை கட்டுப்படுத்த, அனைத்து ஏற்பாடுகள் செய்கிறது.

எட்டு மண்டலங்களில் பள்ளி, கல்லுாரிகளின் சுற்றுப்பகுதிகளில், துாய்மையாக பார்த்து கொள்ள திட்டமிட்டுள்ளது. தண்ணீர் தேங்காமல் சுத்தமாக பராமரிக்கும்படி, சுகாதார ஊழியர்களுக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.சுகாதார அதிகாரிகள், பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். பள்ளங்களில் கொசுக்கள் உற்பத்தியாகாமல், மருந்து தெளிக்க வேண்டும். மண்டல அளவில் வீடு வீடாக சென்று, டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு, ஏற்படுத்த வேண்டும்.கொசுக்கடியால் உடல் நிலை பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று, பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென ஆலோசனை கூறியுள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X