அரசு பேருந்து விபத்து; பயணியர் தப்பினர்

Added : மே 15, 2022
Advertisement
செங்கல்பட்டு : அரசு பேருந்து விபத்துக்குள்ளானதில், பயணியர், அதிஷ்டவசமாக காயமின்றி உயிர் பிழைத்தனர்.சென்னை கோயம்பேடில் நேற்று காலை புறப்பட்ட தடம் எண்: 148 அரசு பேருந்து, போளூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. பேருந்தில் 92 பயணியர் இருந்தனர். பேருந்தை, முருகன், 38, என்பவர் ஓட்டினார்.சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, செங்கல்பட்டு பச்சையம்மன் கோவில் அருகில் வந்தபோது,


செங்கல்பட்டு : அரசு பேருந்து விபத்துக்குள்ளானதில், பயணியர், அதிஷ்டவசமாக காயமின்றி உயிர் பிழைத்தனர்.சென்னை கோயம்பேடில் நேற்று காலை புறப்பட்ட தடம் எண்: 148 அரசு பேருந்து, போளூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. பேருந்தில் 92 பயணியர் இருந்தனர். பேருந்தை, முருகன், 38, என்பவர் ஓட்டினார்



.சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, செங்கல்பட்டு பச்சையம்மன் கோவில் அருகில் வந்தபோது, முன்னால் சென்ற அரசு விரைவு பேருந்து, தடம் எண் '148' பேருந்தின் மீது மோதியது.நிலை தடுமாறிய பேருந்து ஓட்டுனர் முருகன், சாமர்த்தியமாக சாலை தடுப்பில் பேருந்தை மோதி நிறுத்தினார். கவிழ்வதுபோல் சென்று, சாய்ந்த நிலையில் பேருந்து நின்றது.பேருந்தின் முன்பக்க இரும்பு சட்டங்கள், டயருடன் பெயர்ந்து, தடுப்பில் சிக்கியது.

மேலும், டேங்கில் இருந்து டீசல் கசிந்து புகை ஏற்பட்டது. பயணியர் உடனடியாக, பேருந்தில் இருந்து இறங்கினர். யாருக்கும் அடிபடவில்லை.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு தீயணைப்பு வீரர்கள், டீசல் கசிந்த இடத்தில், தண்ணீரை பீய்ச்சியடித்து, அசம்பாவிதத்தை தவிர்த்தனர். பயணியர் அனைவரையும், மாற்று பேருந்துகளில் நடத்துனர் ஏற்றி அனுப்பி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X