உத்திரமேரூர் : படூர் மற்றும் அமராவதிபட்டிணம், தொடக்கபள்ளிகளுக்கு, கான்கிரீட் தளத்துடன் கூடிய புதிய கட்டடம் ஏற்படுத்தி தர கோரி, கலெக்டர் ஆர்த்தியிடம், ஊராட்சி தலைவர் செல்வகுமார் மனு அளித்தார்.உத்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் ஊராட்சி அமராவதிபட்டிணம் கிராமத்தில், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்குகிறது.
இக்கட்டடம், சில ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. மேற்கூரை சிதிலமடைந்து, மழை நேரத்தில் தண்ணீர் சொட்டுவதால், அச்சமயங்களில் பள்ளிக்கு விடுமுறை விடுவது வழக்கமாக உள்ளது.அதேபோல், காட்டங்குளம் ஊராட்சி படூர் கிராம தொடக்கப்பள்ளி கட்டமும் மிகவும் சிதிலமடைந்துள்ளது.பருவ மழை காலத்தின்போது, கட்டடத்தில் ஈரம் படிந்து காணப்படுவதால், இடிந்து விழக்கூடும் என்ற அச்சத்தில், அப்பகுதியினர் அச்சமயம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம், உத்திரமேரூரில் நடந்த உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தியிடம், காட்டாங்குளம் ஊராட்சி தலைவர் செல்வகுமரன் மனு அளித்துள்ளார்.அம்மனுவில், காட்டாங்குளம் ஊராட்சியில், பழுதடைந்த இரண்டு அரசு தொடக்கப் பள்ளி கட்டடங்களை, ஆபத்து ஏற்படும் முன் இடித்து அப்புறப்படுத்தி, தளத்துடன் கூடிய புதிய கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE