வடலுார் : குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்த 25க்கும் மேற்பட்ட பன்றிகளை பேரூராட்சி நிர்வாகம் பிடித்தது.குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் அதிகளவில் பன்றிகள் சுற்றி திரிந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது. பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தி வந்த பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்பது குறிஞ்சிப்பாடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.பேரூராட்சி முதல் கூட்டத்தில் பன்றிகளை பிடிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தாசில்தார் தலைமையில் பன்றி வளர்ப்பவர்களை அழைத்து கூட்டம் நடத்தி, பன்றிகளை அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
இதுவரை பன்றி வளர்ப்பவர்கள் அப்புறப்படுத்தாததால், நகர் முழுதும் சுற்றி திரிந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது.இந்நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணன் தலைமையில், போலீஸ் பாதுகாப்புடன் நகரில் சுற்றித் திரிந்த 25க்கும் மேற்பட்ட பன்றிகள் பிடித்து அப்புறப்படுத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE