கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியிலிருந்து சென்னை, மதுரை, கோவை, புதுச்சேரி உள்ளிட்ட பிற மாவட்ட முக்கிய நகரங்களுக்கு நேரடி அரசு பஸ்களை இயக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கலெக்டருக்கு மனு அளிக்கப்பட்டது.மனு விபரம்:மாவட்ட தலைநகரமான கள்ளக்குறிச்சி, தொழில்துறையில் அதிவேக வளர்ச்சி பெற்று வருகிறது.
அதற்கேற்ப கல்வி, தொலைத் தொடர்பு துறை சார்ந்த வளர்ச்சிகளும் அதிகரித்து வருகிறது.மாவட்ட தலைநகரத்திற்கான அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் வணிக நிறுவனங்கள் பெருகி வருகிறது. மக்கள் தொகை பெருக்கமும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் கள்ளக்குறிச்சி அரசு பஸ் டெப்போவிலிருந்து சென்னைக்கு அதிகாலை டீலக்ஸ் பஸ்கள் இயக்கப்பட்டன.ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக இந்த சர்வீஸ்கள் தடைபட்டு போனது. பெட்ரோல், டீசல் விலையேற்றம், ரயில் வசதி இல்லாமை ஆகிய காரணங்களால் இங்கிருந்து கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் அரசு பஸ் போக்குவரத்தையே நாடி வருகின்றனர்.எனவே, தற்போது காலச்சூழலுக்கு ஏற்றவகையில், சென்னை உள்ளிட்ட பிற மாவட்ட பகுதிகளான மதுரை, தஞ்சாவூர், கோவை, திருப்பூர், கும்பகோணம், வேலுார், பழனி மற்றும் அண்டை மாநிலமான புதுச்சேரி, திருப்பதி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் கள்ளக்குறிச்சியில் இருந்து நேரடி அதிவிரைவு அரசு டீலக்ஸ் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE