புதுச்சேரி : சிவராம்ஜி யோகா மையம் சார்பில், லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நாளை 16ம் தேதி இலவச யோகா பயிற்சி முகாம் தொடங்குகிறது.புதுச்சேரி, கிருஷ்ணா நகரில் இயங்கி வரும் சிவராம்ஜி யோகா மையம் சார்பில், 5 முதல் 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு யோகா பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சி முகாம், லாஸ்பேட்டையில் உள்ள விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நாளை 16ம் தேதி துவங்கி, வரும் 22ம் தேதி வரை தினசரி காலை 9:00 மணி முதல் மாலை 5:30வரைநடைபெறுகிறது.முகாமில்,யோகாசனம், மூச்சுப் பயிற்சி, பாரம்பரிய விளையாட்டுகள், ஓவியம், பெயிண்டிங் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.மேலும், தேசபக்தி பாடல், பக்தி பாடல், வினாடி வினா, தேசபக்தி கதைகள், தேசத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் புராணக் கதைகள் பயிற்றுவிக்கப்படுகிறது.முகாம் தொடர்பாக மேலும் விபரம் வேண்டு வோர் 90805 65523, 87789 71647 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE