திருவாலங்காடு : மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய நுழைவு வாயிலில், தனியார் மருத்துவமனையின் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளதால், சமூக ஆர்வலர்கள் கொதிப்படைந்துள்ளனர்.திருவாலங்காடில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பழைய பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உள்ளது.
இந்த மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு, 150 புறநோயாளிகள், கர்ப்பிணிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.இங்கு, 30 படுக்கை வசதியுடன், இ.சி.ஜி., 'எக்ஸ் -- ரே' எடுக்கும் வசதியுடன் மருத்துவமனை இயங்கி வருகிறது.இந்நிலையில், திருவாலங்காடு அரசு மருத்துவமனை வாயிலில் தனியார் மருத்துவமனையின் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனை வாயிலில் வைக்கப்பட்டுள்ள இந்த விளம்பர பலகை, அரசு மருத்துவமனைக்கு வருவோரை திசை திருப்பி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பும் படியாக உள்ளதால், சமூக ஆர்வலர்கள் கொதிப்படைந்துள்ளனர்.இதுகுறித்து சுகாதார துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE