பெங்களூரு, : 'பொது மக்கள் தங்களின், காலி வீட்டுமனைகளை துாய்மையாக வைத்திருக்காவிட்டால், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்,' என பெங்களூரு மாநகராட்சி எச்சரித்துள்ளது.பெங்களூரின் பல்வேறு லே - அவுட்களில், வீட்டுமனை வாங்கியவர்கள் அதில் வீடு கட்டாமல், அப்படியே விட்டு வைத்துள்ளனர். காலியாக உள்ள இடத்தில், அப்பகுதியினர் குப்பை கொட்டுகின்றனர்.
தேவையற்ற கொடிகள் வளர்ந்து, சுற்றுச்சூழல் அசுத்தமாகிறது.புறநகர்ப்பகுதியில் உள்ள, எலஹங்காவின் கெம்பேகவுடா லே -- அவுட், சவுடேஸ்வரி லே -- அவுட், அட்டூர், ஜக்கூர், தனிசந்திரா, பேட்ராயனபுரா, கோடிகேஹள்ளி, வித்யாரண்யபுரா, தொட்ட பொம்மசந்திரா, குவெம்பு நகர் என, பல்வேறு லே -- அவுட்களில், காலி வீட்டுமனைகள் உள்ளது. இவற்றை சுத்தமாக பராமரிக்காததால், தொற்று நோய்கள் பரவுகிறது.இதை தீவிரமாக கருதிய பெங்களூரு மாநகராட்சி, காலி வீட்டுமனைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதாக எச்சரித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE