சிலவரி செய்திகள்:: கரூர்

Added : மே 15, 2022
Advertisement
டீ மாஸ்டரை கத்தியால் குத்திய வாலிபர் கைதுகரூர்-கரூர் அருகே, டீ மாஸ்டரை கத்தியால் குத்திய, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், புலியூர் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சேட்டு, 60; டீ மாஸ்டர். இவர் பல ஆண்டுகளுக்கு முன், நண்பர் காந்தா என்பவரிடம், கடன் வாங்கியுள்ளார். அதை, காந்தாவின் பேரன் நிதிஷ்குமார், 23, என்பவர் நேற்று முன்தினம், சேட்டுவை சந்தித்து

டீ மாஸ்டரை கத்தியால் குத்திய வாலிபர் கைதுகரூர்-கரூர் அருகே, டீ மாஸ்டரை கத்தியால் குத்திய, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், புலியூர் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சேட்டு, 60; டீ மாஸ்டர். இவர் பல ஆண்டுகளுக்கு முன், நண்பர் காந்தா என்பவரிடம், கடன் வாங்கியுள்ளார். அதை, காந்தாவின் பேரன் நிதிஷ்குமார், 23, என்பவர் நேற்று முன்தினம், சேட்டுவை சந்தித்து கேட்டுள்ளார். அப்போது, நிதிஷ்குமாருக்கும், சேட்டுவுக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நிதிஷ்குமார், கத்தியால் சேட்டுவை குத்தியுள்ளார். அதில், படுகாயமடைந்த சேட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார். பின், சேட்டு அளித்த புகாரின் பேரில், நிதிஷ்குமாரை பசுபதிபாளையம் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
ஜல்லிகள் பெயர்ந்த சிந்தலவாடி பஞ்., சாலைகிருஷ்ணராயபுரம்,-சிந்தலவாடி பஞ்., சாலையில் ஜல்லிகள் பெயர்ந்துள்ளதால், அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி பஞ்., ஆபீஸ் முதல், மாரியம்மன் கோவில் வரை தார்ச்சாலை உள்ளது. இந்த சாலையில் ஜல்லிகற்கள் பெயர்ந்து, குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெறும் அவதிப்படுகின்றனர். மேலும், பஞ்., ஆபீஸ் முன், சாலையில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் தவிறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இந்த சாலையை பஞ்., நிர்வாகம் சரி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகாதானபுரத்தில் கோழிகளுக்கு தடுப்பூசிகிருஷ்ணராயபுரம்,-மகாதானபுரம் கால்நடை மருந்தகத்தில், கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, மகாதானபுரம் கால்நடை மருந்தகம் செயல்படுகிறது. இந்த மருந்தகம் மூலம் கால்நடைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்நிலையில், கோழிகளுக்கு நோய் பரவலை தடுக்கும் வகையில், தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது. இப்பணியில் கால்நடை மருத்துவ பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில், மகாதானபுரம், மேட்டு மகாதானபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து, விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கோழிகளை கொண்டுவந்தனர்.
திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆலோசனை கூட்டம்கரூர்,---கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, குடியிருக்க வீடு, கல்வி தகுதிக்கேற்ப தனியார் வேலைவாய்ப்பு உருவாக்கிடவும், தனியாகவோ அல்லது குழுவாகவோ சுயதொழில் தொடங்குவதற்கு பயிற்சியுடன் கூடிய வங்கி கடன் உதவியும், மருத்துவ உதவி, அடையாள அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை இதுபோன்ற பல்வேறு அடிப்படை வசதிகளை உருவாக்கப்படுகிறது. உங்களின் வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் கவுரவமாக வாழ மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது.இவ்வாறு, அவர் பேசினார். கூட்டத்தில், கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், எஸ்.பி., சுந்தரவடிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X