மாயனூர் கதவணைக்கு அதிகரித்த தண்ணீர் வரத்து

Added : மே 15, 2022 | |
Advertisement
கரூர்-மாயனுார் கதவணைக்கு, தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் வினாடிக்கு, 1,347 கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,377 கனஅடியாக அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும், டெல்டா மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக, காவிரியாற்றில் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்கால்களிலும், தண்ணீர் திறப்பு

கரூர்-மாயனுார் கதவணைக்கு, தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் வினாடிக்கு, 1,347 கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,377 கனஅடியாக அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும், டெல்டா மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக, காவிரியாற்றில் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்கால்களிலும், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.* அமராவதி அணை: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு, 12 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்தது. இதனால், அமராவதி ஆறு, புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 56.79 அடியாக இருந்தது.* நங்காஞ்சி அணை: திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது, 35.63 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.* ஆத்துப்பாளையம் அணை: கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, அணைக்கு வினாடிக்கு, 8 கனஅடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 7.51 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X