மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாளுக்கு கொடுமுடி காவிரியில் தீர்த்தவாரி உற்சவம்

Added : மே 15, 2022
Advertisement
கொடுமுடி,-கொடுமுடி மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோவிலில் நடப்பாண்டு சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று முன்தினம், வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது.இந்நிலையில் காவிரி நதியில் தீர்த்தவாரி உற்சவம் நேற்று நடந்தது. மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள், சூலதேவர், சக்கரத்தாழ்வார் உற்சவர் சிலைகள், காவிரி நதிக்கு கொண்டு செல்லப்பட்டு தீர்த்தவாரி செய்யப்பட்டது.சந்தனம்,

கொடுமுடி,-கொடுமுடி மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோவிலில் நடப்பாண்டு சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று முன்தினம், வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது.

இந்நிலையில் காவிரி நதியில் தீர்த்தவாரி உற்சவம் நேற்று நடந்தது. மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள், சூலதேவர், சக்கரத்தாழ்வார் உற்சவர் சிலைகள், காவிரி நதிக்கு கொண்டு செல்லப்பட்டு தீர்த்தவாரி செய்யப்பட்டது.சந்தனம், மஞ்சள், பன்னீர், விபூதி, இளநீர், பால் மற்றும் தயிர் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து காவிரி நதியில் புனித நீராடல் நடந்தது. ராமலிங்க சிவம், ஸ்ரீதர் பட்டாச்சாரியார், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் தீர்த்தவாரியை நடத்தினர். மாலையில் கொடி இறக்கம் நடந்தது.தொடர்ந்து ரிஷப வாகனத்தில் மகுடேஸ்வரர், கருட வாகனத்தில் வீரநாராயண பெருமாள் திருவீதி உலா முக்கிய வீதிகள் வழியே நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X