பொன்னேரி : மேல்மருவத்துாரில் நடத்துனர் ஒருவர், பயணி தாக்கியதால் இறந்த சம்பவம் தொடர்பாக, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பொன்னேரியில் டிரைவர், கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துவர் அருகே, அரசு பேருந்தில் பயணம் செய்த 'போதை ஆசாமி' ஒருவர் நடத்துனர் பெருமாள், 54, என்பவரை, தாக்கி உள்ளார். இதில், நடத்துனர் பெருமாள் பலத்த காயம் அடைந்து, மருத்துவமனை கொண்டு செல்லும்போது வழியிலேயே இறந்தார்.நடத்துனரை தாக்கிய 'போதை' ஆசாமி மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி, நேற்று, பொன்னேரி அரசு போக்குவரத்து கழக பணிமனையின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி பேருந்து நிலைய வளாகத்தில், பேருந்துகளை எங்கும் இயக்காமல் போராட்டத்தினை தொடர்ந்தனர்.காவல்துறை, பணிமனை அதிகாரிகள், மேற்கண்ட சம்பவம் தொடர்பாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.அதை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுனர், நடத்துனர்கள் பேருந்துகளை இயக்கினர். ஒரு மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தால், பழவேற்காடு, செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல, பேருந்து நிலையம் வந்த பயணியர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE