ஏற்காட்டில் மண்சரிவு போக்குவரத்து நிறுத்தம்

Added : மே 15, 2022
Advertisement
ஏற்காடு-ஏற்காட்டில் சில நாளாக இரவில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை, 6:00 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இதனால், ஏற்காட்டில் இருந்து சேலம் செல்லும் மலைப்பாதையில் உள்ள, 2, 3வது கொண்டை ஊசி வளைவுகள் இடையேயும், 60 அடி பாலம் - 40 அடி பாலம் இடையேயும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டு, அடிவாரத்தில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடியில், வாகனங்கள்


ஏற்காடு-ஏற்காட்டில் சில நாளாக இரவில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை, 6:00 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இதனால், ஏற்காட்டில் இருந்து சேலம் செல்லும் மலைப்பாதையில் உள்ள, 2, 3வது கொண்டை ஊசி வளைவுகள் இடையேயும், 60 அடி பாலம் - 40 அடி பாலம் இடையேயும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டு, அடிவாரத்தில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடியில், வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. மேலும், ஏற்காட்டில் இருந்து சேலம் செல்லும் வாகனங்கள், குப்பனுார் சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. நெடுஞ்சாலைத்துறையினர், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில், பொக்லைன் மூலம் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். நிலச்சரிவால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X