சீர்மிகு நகர திட்டப்பணி: ஒரு நபர் விசாரணை குழு ஆய்வு

Added : மே 15, 2022
Advertisement
சேலம்,-சேலத்தில் சீர்மிகு நகர திட்டப்பணியை, ஒரு நபர் விசாரணை குழு தலைவர் ஆய்வு செய்தார்.தமிழகத்தில் சீர்மிகு நகர திட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளில் தரம், ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்படும் என, மாநில அரசு அறிவித்தது. சேலம் மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தில், 968.67 கோடி ரூபாய் மதிப்பில், 85 பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, 298.81 கோடி ரூபாய் மதிப்பில், 48

சேலம்,-சேலத்தில் சீர்மிகு நகர திட்டப்பணியை, ஒரு நபர் விசாரணை குழு தலைவர் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் சீர்மிகு நகர திட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளில் தரம், ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்படும் என, மாநில அரசு அறிவித்தது. சேலம் மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தில், 968.67 கோடி ரூபாய் மதிப்பில், 85 பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, 298.81 கோடி ரூபாய் மதிப்பில், 48 பணிகள் நிறைவடைந்துள்ளன. 664.46 கோடி ரூபாய் மதிப்பில், 36 பணிகள் நடந்து வருகின்றன. இவற்றை ஆய்வு செய்ய, ஒரு நபர் விசாரணை குழு தலைவராக டேவிதார் நியமிக்கப்பட்டிருந்தார்.அவர், சேலத்தில் முடிவுற்ற, நடந்து வரும் பணிகளை, நேற்று ஆய்வு செய்தார். புது பஸ் ஸ்டாண்ட் அருகே அடுக்குமாடி வாகன நிறுத்தம், திடக்கழிவு மேலாண் நுண்ணுயிர் உரக்கிடங்கு, தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கு, பள்ளப்பட்டி ஏரி, குமரகிரி ஏரி, மரவனேரி பகுதியில் கான்னகிரீட் சாலை, அண்ணா பூங்கா, பள்ளப்பட்டி அறிவியல் பூங்கா, எருமாபாளையம் குப்பை கிடங்கு பசுமைதளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கள ஆய்வு நடத்தினார். தொடர்ந்து மாநகராட்சி மைய அலுவலகத்தில் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X