சேலம்-நுால் விலையேற்றத்தை தடுக்க வலியுறுத்தி, அதன் வியாபாரிகள், நாளை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இதுகுறித்து, சேலம் மாவட்ட நுால் வியாபாரிகள் சங்கத்தலைவர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கை: நம் நாட்டில், 330 லட்சம், 'பேல்' பருத்தி தேவை உள்ளது. அதில், 180 லட்சம் பேல் பருத்தி, தமிழக தேவை. ஆனால், இங்கு மிக குறைந்த அளவில் தான் பருத்தி கிடைக்கிறது. வெளிநாடுகளில் இருந்து ஏப்ரல், மே மாதங்களில், 'ஆர்டர்' கிடைக்கும். அதை ஜனவரி, மார்ச்சில் ஏற்றுமதி செய்வோம். இந்த ஒரு சீசனில் மட்டும், 1,500 கோடி ரூபாய் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதன் மூலம், 2 லட்சம் பேர் நேரடியாக, 5 லட்சம் பேர் மறைமுகமாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.விலையேற்றம் செயற்கையாக உருவாக்கப்படுவதாக கருது கிறோம். நுால் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். அப்போதுதான், நுால் உற்பத்தி சந்தைக்கு வரும். ஜவுளி தொழில், நுால் விலை உயர்வால் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.கடந்த சீசனில் விவசாயிடம் ஒரு கேண்டி(356 கிலோ), 54 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியது, தற்போது, ஒரு லட்சத்து, 5,000 ரூபாயாக உயர்ந்துவிட்டது. அனைத்து ரக நுால்களும், ஒரு மாதத்தில் மட்டும் கிலோவுக்கு, 30 ரூபாய் உயர்ந்துள்ளது. விலை தொடர்ந்து உயர்வதால், ஜவுளி சார்ந்த அனைத்து தொழில்களும் நசிந்து வருகின்றன. தொடர் விலையேற்றத்தை தடுக்க வலியுறுத்தி, மே, 16ல்(நாளை) கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளோம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE