கிருஷ்ணகிரி,-கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. சென்னை வானிலை மையம் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதாகவும், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் மேலும், 5 தினங்களுக்கு கனமழை பெய்யும் எனவும் கூறியிருந்த நிலையில், நேற்று கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பர்கூர், சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் முதல் விட்டு விட்டு மழை பெய்தது. மாலை, 6:30 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கிருஷ்ணகிரி பகுதியில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அக்னி நட்சத்திரம் துவங்கிய நாள் முதலே வழக்கத்திற்கு மாறாக மேகமூட்டத்துடனும், தினமும் மழை பெய்து வருவதாலும் கிருஷ்ணகிரியில் குளுகுளு சீதோஷ்ண நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.* தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் அதிகமாக காணப்பட்டாலும், அவ்வப்போது மேகம் வானமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசி வந்தது. இந்நிலையில் இரவு 7:30 மணியளவில், மாரண்டஹள்ளி அதை சுற்றி உள்ள பகுதிகளில் இடி,மின்னலுடன் கனமழை பெய்து. மழையின் காரணமாக வெப்பம் தனிந்து குளிர்ந்த சீதோசன நிலைய மாறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE