தாராபுரம்,-நகர செயலாளர் தேர்தலில், அதிருப்தி ஏற்பட்டதால், அமைச்சர் வீட்டை தி.மு.க.,வினர் முற்றுகையிட்டனர்.தாராபுரம் தி.மு.க., நகர செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போதைய செயலாளர் தனசேகருடன், கவுன்சிலர்கள் முருகானந்தம், கமலக்கண்ணனும் போட்டியிடுகின்றனர். இதில் தனசேகருக்கு பதிலாக, வேறொருவர் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்தது. இதனால் அதிருப்தி அடைந்த தி.மு.க., வார்டு நிர்வாகிகள், தாராபுரத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி வீட்டை, நேற்று மதியம் முற்றுகையிட்டனர். அவரிடம், தாராபுரம் நகர தி.மு.க., செயலாளராக தனசேகரையே நியமிக்க வேண்டுமென வலியுறுத்தினர்.முன்னதாக திருப்பூரில் உள்ள தி.மு.க., மாவட்ட அலுவலகத்தில், மொத்தமுள்ள, 90 வார்டு நிர்வாகிகளில், 80க்கும் மேற்பட்டோர் மற்றும் அணி நிர்வாகிகள் தங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுப்பதற்காக சென்றது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE