மாநகராட்சியில் 'மாஸ் கிளினீங்'

Added : மே 15, 2022
Advertisement
ஈரோடு5-மாநகராட்சியில் 'மாஸ் கிளினீங்' பணி நேற்று நடந்தது.ஈரோடு மாநகராட்சியில், 60 வார்டுகளில், மழை நீர் வடிகால் களாக உள்ள கழிவு நீர் ஓடைகளை துார்வாரி சுத்தம் செய்யும் பணி, குப்பை அகற்றும் பணி, 'மாஸ் கிளினீங்' பெயரில் மேற்கொள்ளப்படுகிறது.இதன்படி நான்கு மண்டலங்களிலும் நேற்று பணி நடந்தது. இதில் இரண்டாவது மண்டலத்துக்கு உட்பட்ட, 27வது வார்டு கே.என்.கே. சாலை பகுதியில்,

ஈரோடு5-மாநகராட்சியில் 'மாஸ் கிளினீங்' பணி நேற்று நடந்தது.ஈரோடு மாநகராட்சியில், 60 வார்டுகளில், மழை நீர் வடிகால் களாக உள்ள கழிவு நீர் ஓடைகளை துார்வாரி சுத்தம் செய்யும் பணி, குப்பை அகற்றும் பணி, 'மாஸ் கிளினீங்' பெயரில் மேற்கொள்ளப்படுகிறது.இதன்படி நான்கு மண்டலங்களிலும் நேற்று பணி நடந்தது. இதில் இரண்டாவது மண்டலத்துக்கு உட்பட்ட, 27வது வார்டு கே.என்.கே. சாலை பகுதியில், துாய்மை பணிகளை கவுன்சிலர் ஜெயந்தி துவக்கி வைத்தார். முதலாவது மண்டலம் அமராவதி நகர், அம்பேத்கர் நகர், மரவபாளையம், மூன்றாவது மண்டலத்தில் பனங்காடு, சாணார்பாளையம், காந்திநகர், ஒண்டிக்காரன்பாளையம், நான்காவது மண்டலத்தில் சாஸ்திரி நகர் பகுதிகளில் துாய்மை பணி நடந்தது. இதில், 223 துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X