நாமக்கல்,-பொது வினியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம், நாமக்கல் மாவட்டத்தில், எட்டு வழங்கல் அலுவலகங்களில் நடந்தது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய ரேஷன் கார்டு, மொபைல் எண் பதிவு மற்றும் பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை விசாரிக்க, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, எட்டு வட்டவழங்கல் அலுவலகங்களில், மக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது.நாமக்கல், ராசிபுரம், மோகனுார், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, ப.வேலுார் மற்றும் குமாரபாளையம் ஆகிய, எட்டு வட்ட வழங்கல் அலுவலகங்களில், அந்தந்த, வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் முகாம் நடந்தது. நாமக்கல் வட்ட வழங்கல் அலுவலகத்தில், தனி தாசில்தார் பிரகாசம் தலைமை வகித்தார். முகாமில், பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக, புகார் மனுக்கள் பெறப்பட்டது.மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த மக்கள் குறைதீர் முகாமில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் தகுதியான மனுக்களுக்கு, உடனடியாக தீர்வு காணப்பட்டது. முகாம் பணிகளை, நாமக்கல் மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) மோகனசுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE