கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபருக்கு தர்ம அடி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட உறவினர்கள்

Added : மே 15, 2022 | |
Advertisement
வாழப்பாடி--கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபருக்கு தர்ம அடி விழுந்ததால், அவரது உறவினர்கள், வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.வாழப்பாடியை சேர்ந்தவர் வெற்றி, 25. 'கறி' வியாபாரம் செய்கிறார். இவருக்கும், மற்றொரு கறி வியாபாரியான, வாழப்பாடியை சேர்ந்த, 30 வயது வாலிபருக்கும் பழக்கம் இருந்தது. அந்த வாலிபரின், 20 வயது மனைவிக்கும், வெற்றிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு, அவர்கள்

வாழப்பாடி--கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபருக்கு தர்ம அடி விழுந்ததால், அவரது உறவினர்கள், வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.வாழப்பாடியை சேர்ந்தவர் வெற்றி, 25. 'கறி' வியாபாரம் செய்கிறார். இவருக்கும், மற்றொரு கறி வியாபாரியான, வாழப்பாடியை சேர்ந்த, 30 வயது வாலிபருக்கும் பழக்கம் இருந்தது. அந்த வாலிபரின், 20 வயது மனைவிக்கும், வெற்றிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு, அவர்கள் கடந்த, 8ல் வீட்டை விட்டு வெளியேறினர்.இரு நாளுக்கு முன், வெற்றி, கள்ளக்காதலியுடன், அவரது வீட்டுக்கு வந்தார். இதையறிந்து, நேற்று, பாதிக்கப்பட்ட வாலிபர், அடியாட்களுடன் சென்று, வெற்றியை தாக்கினார். படுகாயமடைந்த அவர், வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெற்றியை தாக்கியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அவரது உறவினர்கள், வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். வெற்றிக்கு ஒரு ஆண் குழந்தையும், பாதிக்கப்பட்டவருக்கு இரு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X