புதுச்சேரி : பாரதி, சுதேசி மில்லை நவீனப்படுத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பா.ம.க., வலியுறுத்தி உள்ளது.பா.ம.க., மாநில அமைப் பாளர் கணபதி வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி நகரப் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சுதேசி மற்றும் பாரதி மில்லை மூடும் அறிவிப்பை மாநில அரசு திரும்பப் பெற வேண்டும்.புதுச்சேரி மாநிலத்தின் அடையாளங்களில் ஒன்றான சுதேசி மற்றும் பாரதி மில்களை நவீனப்படுத்தி
மீண்டும் திறந்து, ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது இவ்விரு மில்களையும் மூடுவதாக அறிவிப்பது மக்களை ஏமாற்றும் வேலை.ஏற்கனவே புதுச்சேரி அரசின் பல துறைகளில் வேலை செய்த இளைஞர்கள் சம்பளம் கொடுக்காததால் நடுத்தெருவுக்கு வந்து விட்டனர் எனவே, மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று இரண்டு மில்களையும் இயக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE