கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தோட்டக்கலைத் துறை சார்பில் வழங்கப்பட்ட நடமாடும் காய்கறி விற்பனை வண்டியை வாடகைக்கு விடும் அவலம் இருந்து வருகிறது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் சம்பங்கி, மல்லி, கோலியாஸ் ஆகிய பயிர்களுக்கு மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்மூலம் பல்வேறு கிராமங்களில் மரவள்ளி சாகுபடி, மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் உற்பத்தி ஆகிய பணிகள் செயல்படுத்தப் படுகிறது. இதற்காக விவசாயிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்களை வழங்கி வருகின்றனர்.விவசாயிகளுக்கு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் காய்கறி வியாபாரம் செய்ய தள்ளு வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், தள்ளு வண்டியை பெற்ற ஒரு சில பயனாளிகள் அவர்கள் வியாபாரம் செய்யாமல் அந்த வண்டியை பிறருக்கு வாடகைக்கு விடும் அவலம் உள்ளது.அவ்வாறு வாடகைக்கு எடுத்தவர்கள் கள்ளக்குறிச்சி உழவர் சந்தை பகுதியில் சாலையோரம் ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
நாளொன்றுக்கு 50 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து காய்கறி வியாபாரம் செய்வதாக அங்கு கடை வைத்துள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். முறையான பயனாளிகளை தேர்வு செய்து உபகரணங்கள் வழங்கப்படாததால், சாலையோரங்களில் கடை வைப்பது தடை செய்யப்பட்டிருந்த போதும், இதுபோன்ற துறை ரீதியான வாகனங்களை அங்கு நிறுத்தி வியாபாரம் செய்யும் அவலம் நீடிக்கிறது. அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால் பல்வேறு திட்ட உதவி உபகரணங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement