எலுமிச்சை பழம் விலை சரிவு
தர்மபுரி,-தர்மபுரி, உழவர்சந்தைகளில் விற்கப்படும் எலுமிச்சை பழம் விலை சரிந்தது.தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி, ஏ.ஜெட்டிஹள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர் ஆகிய ஐந்து உழவர்சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், இந்த மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் பல்வேறு காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். எலுமிச்சை பழம் விலை தற்போது சிறிது சரிந்து வருகிது. அதன்படி, கோடையையொட்டி இம்மாத முதல் வாரத்தில் ஒரு கிலோ எலுமிச்சை பழம், 220 ரூபாய்க்கு விற்பனையானது. தர்மபுரி மாவட்டத்தில் நாள்தோறும் கோடைமழை பெய்ய துவங்கியதால், இதன் விலை விலை சரிய துவங்கியது. அதன்படி நேற்று முன்தினம், 200 நேற்று, 190 ரூபாய்க்கு விற்பனையானது.தென்னை மரம் முறிந்து விழுந்ததில் பெண் பலிபோளூர்,-போளூர் அருகே தென்னை மரம் விழுந்ததில் பெண் பலியானார். போளூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரியகரம் கிராமத்தில், நுாறு நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஏரி கால்வாய் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏரிக்கரை அருகே உள்ள விவசாய நிலத்தில் உள்ள ஒரு தென்னை மரம் அடியோடு பெயர்ந்து கால்வாயில் விழுந்தது. அப்போது ஏரி கால்வாயில் வேலை செய்துகொண்டிருந்த பூங் கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுதா, 38, மஞ்சுளா, 35, ஆகியோர் மீது தென்னைமரம் விழுந்ததில் படுகாயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சுதா பலியானார். மஞ்சுளா திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து, போளூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement