கிருஷ்ணகிரி-தமிழ்நாடு அச்சக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் அச்சகங்கள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட அச்சக உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. அச்சங்கத்தின் தலைவர் மாது, செயலாளர் குப்புசாமி ஆகியோர் கூறியதாவத:காகிதம், மூலபொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதேபோல் ஜி.எஸ்.டி., 12 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக உயர்த்தியதை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி, அச்சகங்கள் ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் நடத்தியது. இதில், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி, ராயக்கோட்டை, வேப்பனப்பள்ளி, பர்கூர், ஊத்தங்கரை பகுதிகளில் செயல்படும், 100-க்கும் மேற்பட்ட அச்சகங்கள், டிசைனிங் சென்டர்கள் கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்றன. இதனால், 8 லட்சம் ரூபாய் அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இவ்வாறு கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE