வாரத்தில் இரண்டாவது சனி, நான்காவது சனிக்கிழமைகளில், டவுன் பஞ்.,களில் ஒருங்கிணைந்த சுகாதார பணி மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.இதன்படி அந்தியூர் டவுன் பஞ்., சார்பில் பத்ரகாளியம்மன் கோயில், செல்லீஸ்வரர் கோயில், அழகு ராஜ பெருமாள் கோயில், பஸ் நிலையம், ரவுண்டானா பகுதி, தாலுகா அலுவலகம், தவிட்டு பாளையம் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று துாய்மை பணி நடந்தது. டவுன் பஞ்., தலைவர் பாண்டியம்மாள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.* பெருந்துறை டவுன் பஞ்.,ல், ஒருங்கிணைந்த துாய்மை பணியை, ஈரோடு மண்டலம், டவுன் பஞ்., உதவி இயக்குனர் சுந்தரமூர்த்தி துவக்கி வைத்தார். துாய்மை பணியாளர், பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர், தன்னார்வலர்கள், குயவன் குட்டை பூங்காவில் துப்புரவு பணியில் ஈடுபட்டனர். * சென்னிமலை டவுன் பஞ்.,ல் ஒருங்கிணைந்த துப்புரவு பணி, மலை கோவில் அடிவாரத்தில் நடந்தது. தலைவர் ஸ்ரீதேவி அசோக் தொடங்கி வைத்தார்.இதேபோல் லக்கம்பட்டி டவுன் பஞ்., மற்றும் சலங்க பாளையம் டவுன் பஞ்.,ல், ஒருங்கிணைந்த துப்புரவு முகாம் நேற்று நடந்தது.
- நிருபர் குழு -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE