ஈரோடு,-நுால் விலை உயர்வை கண்டித்து நடக்கும் கடையடைப்புக்கு, ஈரோடு ஜவுளி தினசரி, வாரச்சந்தை கடைகள் ஆதரவு தெரிவித்துள்ளன. நுால் விலை உயர்வை கண்டித்து, நாளை, நாளை மறுதினம் (16, 17ல்), ஜவுளி நிறுவனங்கள் முழு கடையடைப்பு நடத்த முடிவு செய்துள்ளன. இதற்கு ஈரோடு கனி மார்க்கெட் வார சந்தை, தினசரி வியாபாரிகள் சங்கம், அசோகபுரம் வார சந்தை வியாபாரிகள், ஈரோடு சென்ட்ரல் தியேட்டர் சந்தை வியாபாரிகள், டி.வி.எஸ். வீதி சாலையோர கடை வியாபாரிகள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.இதன்படி கனி மார்க்கெட்டில் தினசரி கடைகள், 280, வாரச்சந்தை கடைகள், 780, அசோக புரத்தில், 2,௦௦௦ கடைகள், டி.வி.எஸ்., வீதியில், 150, சென்ட்ரல் தியேட்டர் மார்க்கெட்டில், 1,500 கடைகள் அடைக்கப்படும் என்று, ஈரோடு கனி மார்க்கெட் வாரச்சந்தை கடை வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.விசைத்தறிகள் உற்பத்தி நிறுத்தம்சென்னிமலை வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் அவசர கூட்டம் நடந்தது. இதில் நுால் விலை உயர்வை கண்டித்து, ௧௬, ௧௭ல் நடக்கும் கடையடைப்பு போராட்டத்துக்கு, ஏகமனதாக ஆதரவு தெரிவிக்கப்பட்டது.இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, சென்னிமலை பகுதியில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி, இரண்டு நாட்கள் நிறுத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் சாயச்சாலை, பெட்ஷீட் உற்பத்தி நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு விடுமுறை கொடுத்து ஒத்துழைக்க, சங்கத்தலைவர் பொன். ஈஸ்வரமூர்த்தி, செயலாளர் சவுந்திரராஜன், பொருளாளர் சண்முகம் கூட்டாக அறிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE