ஈரோடு,-மின் கம்பிகளில் மோதும் மரக்கிளைகளை வெட்டி அகற்றிய மின்வாரியம், அதை முறையாக அகற்றாமல், அப்படியே போட்டுச் சென்றுள்ளதால், இடையூறாக கிடக்கிறது.மாநகரில் கடந்த சில நாட்களாக, பலத்த சூறை காற்றுடன் மழையும் பெய்கிறது. காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாமல், மர கிளைகள் அபாயகரமான வகையில் ஆடி வருகிறது. இவ்வாறு ஆபத்தான மர கிளைகள், மின் கம்பி களில் உரசும்போது மின்சாரம் மரத்தில் பாயக்கூடும் என்ற நிலை தொடர்கிறது. இதை தவிர்க்க மாநகர பகுதியில், மின் கம்பி களை உரசியவாறு செல்லும் மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியை மின் வாரியம் மேற்கொண்டுள்ளது. ஆனால், மரக்கிளைகளை வெட்டி அங்கேயே போட்டு செல்கின்றனர். இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து மக்கள் கூறியதாவது: வாகனங்கள் செல்லும் சாலையோரம், மக்கள் நடப்பதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் விடப்பட்ட நடைபாதை பகுதிகளில், வெட்டப்பட்ட மரக்கிளைகளை மின் வாரியத்தினர் போட்டு சென்றுள்ளனர். மரக்கிளைகளில் விஷ ஜந்துகள், தஞ்சமடையும் ஆபத்து உள்ளது. மெத்தனம் காட்டாமல், மரக்கிளைகளை மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE