ரவுடிகளின் வீடுகளில் வெடிகுண்டு பதுக்கலா? எஸ்.எஸ்.பி., தலைமையில் தீவிர சோதனை| Dinamalar

ரவுடிகளின் வீடுகளில் வெடிகுண்டு பதுக்கலா? எஸ்.எஸ்.பி., தலைமையில் தீவிர சோதனை

Added : மே 15, 2022 | |
புதுச்சேரி : முத்தியால்பேட்டை பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் வெடிகுண்டுகள்,ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.புதுச்சேரியில் சமீப காலமாக குற்றச் செயல்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, எதிர் தரப்பை கொல்லவும் அச்சுறுத்தவும் நாட்டு வெடிகுண்டு வீசுவது அதிகரித்து வருகிறது.சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, தொடர்ந்து குற்றச்


புதுச்சேரி : முத்தியால்பேட்டை பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் வெடிகுண்டுகள்,ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.புதுச்சேரியில் சமீப காலமாக குற்றச் செயல்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, எதிர் தரப்பை கொல்லவும் அச்சுறுத்தவும் நாட்டு வெடிகுண்டு வீசுவது அதிகரித்து வருகிறது.சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை கைது செய்து ஜெயிலில் அடைத்து வருகின்றனர்.

ரவுடிகள் ஊருக்குள் நுழையவும் தடை விதித்து வருகின்றனர்.இந்நிலையில் சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி., தீபிகா தலைமையில் முத்தியால்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட வாழைக்குளம், வைத்திக்குப்பம், குருசுக்குப்பம், சோலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.அதிகாலை 6.30 மணி முதல் 8.30 வரை போலீசார் மோப்பநாய் மற்றும் வெடி குண்டு நிபுணர்களுடன், ஒவ்வொரு ரவுடிகளின் வீட்டிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.இன்ஸ்பெக்டர் நகராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு அதிரடிப்படை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின்போது ரவுடிகளின் வீடுகளில் வெடிகுண்டுகள், ஆயுதங்கள் எதுவும் சிக்கவில்லை.வீடுகளில் இருந்த ரவுடிகளிடம், குற்றச் செயல்களை கைவிட்டு திருந்தி ஒழுங்காக நடக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்டம் தன் கடமையை செய்யும் என சீனியர் எஸ்.பி., தீபிகா, எச்சரித்தார்.வீடுகளில் இல்லாத ரவுடிகளின் பெயர்கள் சேகரிக்கப்பட்டு, அவர்கள் முத்தியால்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X