புவனகிரி : கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.மாவட்ட ஊராட்சி பொறியாளர் தனிகாசலம் வரவேற்றார். கலெக்டர் பாலசுப்ரமணியம், சேர்மன் கனிமொழி தேவதாஸ் படையாண்டவர், சிதம்பரம் ஆர்.டி.ஒ., ரவி முன்னிலை வகித்தனர்.அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த கூட்டத்தில் கீரப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி செயலர்கள், அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஊராட்சித் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்களிடம் குறை, நிறைகளை கேட்டறிந்த அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது;தமிழகத்தில் நல்லாட்சி நடந்து வருகிறது. கீரப்பாளையத்தில் 45 ஊராட்சிள் மற்றும் 111 குக் கிராமங்கள் உள்ளன. கிராமங்களில் வசிப்பவர்கள் மற்றவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும்.நான் இளம் வயதில் உதவிகளை செய்தேன். தற்போது அமைச்சராக , மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. கட்சிப்பாகுபாடு இல்லாமல் என்னை அணுகி தேவையான உதவிகளை பெற்று தங்கள் கிராமத்தை உயர்த்த வேண்டும்.முதல்வர் உத்தரவினால் அமைச்சர்கள், அதிகாரிகள் பம்பரமாக சுழன்று பணியாற்றுகின்றனர். மக்கள் பிரதிநிதிகளாகிய நீங்களும் மக்கள் வளர்ச்சிக்கு பணியாற்றுங்கள். உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பன்படுத்திக் கொள்ளுங்கள். எந்த நேரத்திலும் என்னை சந்தித்து மக்கள் பிரச்னைக்கு தீர்வு காணுங்கள்' என்றார்.தொடர்ந்து பல்வேறு துறையின் கீழ் ஏற்பாடு செய்திருந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமச்சந்திரன், சீனுவாசன், ஒன்றிய செயலாளர்கள் சபாநாயகம், மதியழகன், வழக்கறிஞர் பழனிமனோகரன், கீரப்பாளையம் ஊராட்சி தலைவர் கீரன், புவனகிரி சண்முகம், செல்லபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர். மேலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE