கள்ளக்குறிச்சி : தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபரை போலீசார், குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் என்கிற சன் கதிரவன், 40; இவர், கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி திருக்கோவிலுார் அடுத்த மண்டபத்தைச் சேர்ந்த சேட்டு என்பவரது வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த வழக்கில் திருக்கோவிலுார் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மேலும் இவர் மீது திருக்கோவிலுார் உட்கோட்டத்தில் பல்வேறு கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரது நடவடிக்கையை தடுக்க, குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., செல்வகுமார் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். சன் கதிரவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்.அதன்பேரில், சன் கதிரவன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE