பாகூர் மூலநாதர் சுவாமிகோவிலில் தாராபிஷேகம்

Added : மே 15, 2022
Advertisement
பாகூர் : பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு வரும் 28ம் தேதி வரை தாராபிஷேகம் நடக்கிறது.பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.இந்த ஆண்டிற்கான அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி துவங்கியது. இதனை தொடர்ந்து, தினமும்


பாகூர் : பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு வரும் 28ம் தேதி வரை தாராபிஷேகம் நடக்கிறது.பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

இந்த ஆண்டிற்கான அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி துவங்கியது. இதனை தொடர்ந்து, தினமும் மூலநாதர், வேதாம்பிகை அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது.அக்னி நட்சத்திர நாட்கள் முழுவதும் (வரும் 28ம் தேதி வரை) சுவாமியை குளிர் விக்கும் வகையில், தாராபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.இதில் தாரா பாத்திரத்தில் நிரப்பப்பட்ட பன்னீர், ஏலக்காய் உள்ளிட்ட வாசனை திரவி யங்கள், சிவலிங்கத்தின் மீது துளித் துளியாக விழும். இந்த தாராபிஷேகத் திற்கு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் தர விரும்பும் பக்தர்கள், கோவில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அர்ச்சகர்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X