விழுப்புரம் : விழுப்புரம் அருகே லாரி டிரைவரிடம் நுாதன முறையில் பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.விக்கிரவாண்டியைச் சேர்ந்தவர் ஜெயமூர்த்திராஜா, 54; லாரி டிரைவர். இவர் தனது மனைவி வங்கி கணக்கு மொபைல் ஆப் மூலம் 10 ஆயிரம் ரூபாயை, கடந்த பிப்ரவரி 16ம் தேதி, தான் கணக்கு வைத்துள்ள வங்கி கணக்கிற்கு மாற்றும் போது அந்த பணம் அவரது கணக்கில் சேரவில்லை.இதையடுத்து அவர், வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு அதன் மூலம் பெற்ற மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர், உங்களுக்கு ஏற்பட்ட பிரச்னையை சரிசெய்ய குயிக் சப்போர்ட் என்ற மொபைல் ஆப்பை பதிவிறக்கம் செய்ய கூறியுள்ளார்.இதை நம்பி ஜெயமூர்த்திராஜா, அந்த ஆப்பை தனது மொபைலில் பதிவிறக்கம் செய்து அதில் கேட்ட விபரங்களை பதிந்துள்ளார். அடுத்த சில மணி நேரத்தில் அவரது மனைவி வங்கி கணக்கிலிருந்து 59 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்தது.இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE