சட்டக்கல்லுாரியில் கருத்தரங்கம்| Dinamalar

சட்டக்கல்லுாரியில் கருத்தரங்கம்

Added : மே 15, 2022 | |
திண்டிவனம், : திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் சரசுவதி சட்டக்கல்லுாரியில் பெண் உரிமை குறித்த கருத்தரங்கம் நடந்தது.கல்லுாரி இயக்குனர் டாக்டர் இளஞ்செழியன் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியை உமாசங்கரி, உதவி பேராசிரியர் ஜானகிராமன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.சிறப்பு விருந்தினர் கூடுதல் அரசு வழக்கறிஞர் உஷா, பாலியல் வன்முறையில் இருந்து விடுபடுதல், ஓட்டுரிமை,


திண்டிவனம், : திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் சரசுவதி சட்டக்கல்லுாரியில் பெண் உரிமை குறித்த கருத்தரங்கம் நடந்தது.கல்லுாரி இயக்குனர் டாக்டர் இளஞ்செழியன் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியை உமாசங்கரி, உதவி பேராசிரியர் ஜானகிராமன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.சிறப்பு விருந்தினர் கூடுதல் அரசு வழக்கறிஞர் உஷா, பாலியல் வன்முறையில் இருந்து விடுபடுதல், ஓட்டுரிமை, குடும்ப உறவில் பெண்களின் உரிமை, சமமான ஊதியம் குறித்து பேசினார். மாணவி சவுபர்நிகா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.நிகழ்ச்சியில் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பயனடைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X