வில்லியனுார் அருகே வாலிபருக்கு வெட்டு; கொத்தனார் கைது

Added : மே 15, 2022
Advertisement
வில்லியனுார்: வில்லியனுார் அருகே, நண்பரின் தந்தையை தாக்கியது குறித்து நியாயம் கேட்கச் சென்ற இளைஞரை சரமாரியாக வெட்டிய கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.வில்லியனுார் அருகே உள்ள முத்துப்பிள்ளை பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவரிடம், அரும்பார்த்தபுரம் எழில் நகரை சேர்ந்த கொத்தனார் தங்கப்பராஜன்(34) வீடுகட்டும் வேலை செய்து வந்தார்.வீடு வேலை முடிந்த நிலையில், மீதம்


வில்லியனுார்: வில்லியனுார் அருகே, நண்பரின் தந்தையை தாக்கியது குறித்து நியாயம் கேட்கச் சென்ற இளைஞரை சரமாரியாக வெட்டிய கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.வில்லியனுார் அருகே உள்ள முத்துப்பிள்ளை பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவரிடம், அரும்பார்த்தபுரம் எழில் நகரை சேர்ந்த கொத்தனார்



தங்கப்பராஜன்(34) வீடுகட்டும் வேலை செய்து வந்தார்.வீடு வேலை முடிந்த நிலையில், மீதம் இருந்த ஜல்லி மற்றும் மணல் ஆகியவற்றை விலைக்கு கேட்டுள்ளார் தங்கப்பராஜன். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தங்கப்பராஜன், ராஜசேகரை தாக்கினார்.இது குறித்து ராஜசேகர், தனது மகன் லோகேஷிடம் தெரிவித்துள்ளார். பாலிக்டெக்னிக் கல்லுாரியில் படித்து வரும் லோகேஷ், தனது நண்பர் கோபாலன்கடையை சேர்ந்த லோகேஷ்வரன், 21, என்பவரை அழைத்துக் கொண்டு இரவு 10:00 மணியளவில் கொத்தனார் வீட்டிற்கு சென்றார்.

அங்கு தங்கப்பராஜை இருவரும் தாக்கினர். கோபமடைந்த தங்கப்பராஜ், வீட்டிற்குள் சென்று, கத்தியை எடுத்து வந்ததை கண்டு இருவரும் தப்பி ஓடினர்.அப்போது தவறி விழுந்த லோகேஷ்வரன் தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக கொத்தனார் வெட்டினார். ரத்த வெள்ளத்தில் மயங்கிய லோகேஷ்வரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஜிப்மரில் சேர்த்தனர்.புகாரின் பேரில் வில்லியனுார் உதவி சப் இன்ஸ்பெக்டர் தணிகாச்சலம் வழக்கு பதிந்து, கொத்தனார் தங்கப்பராஜை கைது செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X