விருத்தாசலம் : வழக்கறிஞர்கள் சமூக நீதிப்பேரவை சார்பில் தமிழக வளர்ச்சிக்கு வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு அவசியம் குறித்த விளக்க கருத்தரங்கு நடந்தது.விருத்தாசலத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் தமிழரசன் தலைமை தாங்கினார். கிழக்கு மண்டல மாநில செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். மாநில தலைவர் வழக்கறிஞர் பாலு, வடக்கு மண்டல செயலாளர் சரவணன் சிறப்புரையாற்றினர்.
மாநில சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி, மாநில மகளிரணி செயலாளர் தமிழரசி வாழ்த்தி பேசினர்.மாவட்ட செயலாளர்கள் கார்த்திகேயன், சண்முத்துகிருஷ்ணன், செல்வமகேஷ், ரவிச்சந்திரன், மகளிரணி செயலாளர் சுஜாதா, இளைஞரணி செயலாளர் கோபிநாத், நகர செயலாளர் விஜயகுமார், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் சிங்காரவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.மாநில துணை செயலாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார். கூட்டத்தில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு ஏன் அவசியம் என்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement