விழுப்புரம் : விழுப்புரத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ளப்படும் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.கலெக்டர் மோகன் முன்னிலை வகித்தார். நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய துறை கூடுதல் தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா தலைமை தாங்கி பேசுகையில், 'மக்களின் முக்கிய தேவையான குடிநீர் வழங்கல், சாலை பணி, பொது சுகாதார வளாகம் அமைப்பது, பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கு சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் திட்டமிட்ட பணிகளை நிதி ஒதுக்கீடுக்கு ஏற்ப உடனடியாக முடிக்கும் போது, வரும் ஆண்டுகளுக்கு தேவையான திட்டங்களை தேர்வு செய்ய எளிதாக இருக்கும். இதன் மூலம் போதிய நிதி ஒதுக்கீடு பெற்று பணிகளை முடித்து, மக்களின் தேவையை எளிதாக நிறைவேற்ற முடியும்' என்றார்.சப் கலெக்டர் அமித், குடிநீர் வடிகால் வாரிய முதன்மை பொறியாளர் ரவிந்திரன் உட்பட அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE