புதுச்சேரி : குருநானக் 553வது பிறந்த நாளையொட்டி, புதுச்சேரி பல்கலைக் கழகத்தில், நான்கு நாள் தேசிய கருத்தரங்கம் நடந்தது.'தேசிய ஒருமைப்பாடு மற்றும் சுற்றுச்சூழலின் பின்னணியில் புனித குருநானக் தேவ்ஜியின் தத்துவத்தின் தொடர்பு' என்ற தலைப்பில் இக்கருத்தரங்கம் நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் எம்.பி., சர்தார் தர்லோச்சன் சிங், துணைவேந்தர் குர்மீத் சிங் கலந்து கொண்டனர்.முன்னாள் எம்.பி.,சர்தார் தர்லோச்சர் சிங் பேசிய தாவது:குருநானக் இலங்கை, திபெத், ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த பயணங்கள் உடாசிஸ் என அழைக்கப் படுகின்றன.குருநானக்கின் சீடர்கள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள். ஒடிசா ,கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் இருந்து சீடர்களை தேர்ந்தெடுத்து தேசிய ஒற்றுமையை பறைசாற்றினார்.இந்தியாவின் முதல் போராட்டம் ஆங்கிலேயர்களுக்கு எதிரானது அல்ல. சுதந்திர இயக்கம் 1857ல் புரட்சியில் இருந்து ஆரம்பித்தது என்று கருதப்படுகிறது. அதே சமயம் நானக், பாபர் மற்றும் பிற படையெடுப்பாளர்களை எதிர்த்துள்ளார்.எனவே 15ம் நுாற்றாண்டு முதல் சுதந்திர போராட்ட வரலாற்றை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் ஹிமாச்சல பிரதேச மத்திய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் குல்தீப் அக்னி ஹோத்ரி, ராஷ்ட்ரிய சீக்கிய சங்க அகில இந்திய செயல் தலைவர் டேவிந்தர் சிங் குஜ்ரால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE