அலைகழிக்கப்படும் பழங்குடியினர் பட்டா வழங்க நடவடிக்கை தேவை

Added : மே 15, 2022
Advertisement
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் பஸ் நிலையத்தில் தங்கிருந்த பழங்குடியின மக்கள் மாற்று இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சின்னசெவலையில் பழங்குடியின மக்கள் (பூம் பூம் மாட்டுக்காரர்கள்) 7 குடும்பத்தினர் அப்பகுதியில் உள்ள பள்ளி அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்தனர்.இதற்கு, அந்த கிராம மக்கள் அங்கு தங்குவதற்கு எதிர்ப்பு



திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் பஸ் நிலையத்தில் தங்கிருந்த பழங்குடியின மக்கள் மாற்று இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சின்னசெவலையில் பழங்குடியின மக்கள் (பூம் பூம் மாட்டுக்காரர்கள்) 7 குடும்பத்தினர் அப்பகுதியில் உள்ள பள்ளி அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்தனர்.இதற்கு, அந்த கிராம மக்கள் அங்கு தங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் கடந்த 12ம் தேதி திருவெண்ணெய்நல்லுார் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே உள்ள புளிய மரத்தடியில் தஞ்சமடைந்தனர்.தாசில்தார் பாஸ்கரதாஸ் மற்றும் போலீசார் அவர்களிடம் பேசி சமாதானம் செய்து, விரைவில் பட்டா வழங்கவும் அதுவரை திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள ஆலங்குப்பம் பகுதியில் தங்கும்படி தெரிவித்தனர்.ஆனால், அவர்கள் அங்கு செல்லாமல் திருவெண்ணெய்நல்லுாரில் திறக்கப்படாத பஸ் நிலையத்தில் தங்கினர். அங்கும் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தாசில்தாரிடம் தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் தாசில்தார் பாஸ்கரதாஸ் மற்றும் போலீசார் பஸ் நிலையத்திற்குச் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பட்டா வழங்க விரைவில் ஏற்பாடு செய்யப்படும். அதுரை ஆலங்குப்பம் கிராமத்தில் தங்கும்படி கூறி அவர்களை சரக்கு வேனில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X