புதுச்சேரி : புதுச்சேரியில் நடைபெற்று வரும் கம்பன் விழாவில் நேற்று கவியரங்கம் மற்றும் பட்டி மன்றம் நடந்தது.புதுச்சேரி கம்பன் கழகம் சார்பில், 55ம் ஆண்டு கம்பன் விழா நேற்று முன்தினம் தொடங்கியது.
புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்று வரும் இவ்விழாவின் இரண்டாம் நாளான நேற்று காலை இளையோர் அரங்கம் நடைபெற்றது.ராமலிங்கம் தலைமையில், 'கம்பனில் கற்றதும் பெற்றதும்' என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது.இதில், 'தாய் ஒக்கும் அன்பின்' என்ற தலைப்பில் நிவேதிதா, 'குருவின் வாசகம்' என்ற தலைப்பில் மதன்குமார், 'யாதினும் இனிய நண்ப' என்ற தலைப்பில் யோகேஷ்குமார் ஆகியோர் சொற்பொழிவாற்றினர்.தொடர்ந்து 'தாயை பழித்த பரதனின் சொற்கள் ஏற்புடையன அல்ல' என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெற்றது.மாலை 5:00 மணிக்கு 'போற்றுவேன் கம்பனைப் புகழ்ந்து' என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.திரைப்பட பாடலாசிரியர் விஜய் தலைமையில் நடந்த கவியரங்கில், 'கல்' என்ற தலைப்பில் நாகப்பன், 'பாதுகை' என்ற தலைப்பில் பாரதிதாசன், 'கணையாழி' என்ற தலைப்பில் இனியன், 'வில்' என்ற தலைப்பில் ரேவதி கவிதை வாசித்தனர்.'
படைத்தவனும் படித்தவரும் மிகவும் நெகிழும் பாத்திரம்' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. நடுவர் ராமலிங்கம் தலைமையில் நடந்த பட்டிமன்றத்தில், 'பரதன்' என்ற தலைப்பில் விசாலாட்சி சுப்ரமணியம், வேணுகோபால் விஜயகிருஷ்ணன் பேசினர்.'சடாயு' என்ற தலைப்பில் விஜயசுந்தரி, அருட்செல்வி, வாசுதேவாவும், 'கும்பகர்ணன்' தலைப்பில் பாரதி, கோவிந்தராசு, எழிலரசி ஆகியோர் பேசினர். இன்று மாலை உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் முன்னிலையில், பட்டிமன்ற மேல் முறையீடு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE