பசுந்தீவன புல்சாகுபடி மானியம் பெற25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

Added : மே 15, 2022
Advertisement
புதுச்சேரி : பசுந்தீவன புல் சாகுபடிக்கு மானியம் பெற, வரும் 25ம் தேதிக்குள் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறை அறிவித்துள்ளது.இது குறித்து புதுச்சேரி வேளாண் துறை பயிற்சி வழி தொடர்புத் திட்ட அலுவலக கூடுதல் வேளாண் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:புதுச்சேரி பகுதியில் பசுந்தீவன சாகுபடியை அதிகரிக்க வேளாண்துறை மூலம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த



புதுச்சேரி : பசுந்தீவன புல் சாகுபடிக்கு மானியம் பெற, வரும் 25ம் தேதிக்குள் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறை அறிவித்துள்ளது.இது குறித்து புதுச்சேரி வேளாண் துறை பயிற்சி வழி தொடர்புத் திட்ட அலுவலக கூடுதல் வேளாண் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:புதுச்சேரி பகுதியில் பசுந்தீவன சாகுபடியை அதிகரிக்க வேளாண்துறை மூலம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இந்த ஊக்கத் தொகையானது, ஏக்கருக்கு ஓர் ஆண்டுக்கு 8,000 ரூபாய் என்ற வீதத்தில், மூன்று ஆண்டுகளுக்கு, வழங்கப்பட்டு வருகிறது.எனவே கடந்த மார்ச் 31ம் தேதி வரை, பசுந்தீவன புல் சாகுபடி செய்த விவசாயிகள், மானியம் கோருவதற்கான விண்ணப்பங்களை உழவர் உதவியகங்களில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும் 25ம் தேதி தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X