இன்றைய கிரைம் ரவுண்ட் அப்: டில்லியில் தீ விபத்தில் 20 பசுக்கள் பலி

Updated : மே 15, 2022 | Added : மே 15, 2022
Advertisement
இந்திய நிகழ்வுகள் பால் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பசுக்கள் பலிபுதுடில்லி-டில்லியில், பால் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில், 20 பசுக்கள் உயிரோடு எரிந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டில்லி அருகே உள்ள ரோஹினி சவ்தா கிராமத்தில் பால் பண்ணை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மாட்டுக் கொட்டகையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென தீ விபத்து
இன்றைய கிரைம் ரவுண்ட் அப்இந்திய நிகழ்வுகள்பால் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பசுக்கள் பலி
புதுடில்லி-டில்லியில், பால் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில், 20 பசுக்கள் உயிரோடு எரிந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டில்லி அருகே உள்ள ரோஹினி சவ்தா கிராமத்தில் பால் பண்ணை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மாட்டுக் கொட்டகையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

வேகமாக பரவிய தீயில் அங்கு கட்டப்பட்டிருந்த பசுக்கள் சிக்கிக் கொண்டன. பண்ணையாட்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் காய்ந்த வைக்கோல் பதர்களில் பற்றிய தீயை சுலபமாக அணைக்க முடியவில்லை. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் கட்டுக்கடங்காத தீயை அணைத்தனர். இந்த விபத்தில், 20 பசுக்கள் உயிரோடு எரிந்து கரிக்கட்டைகளாயின. இது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இருவர் மீது வழக்கு பதிவு


உ.பி.,யில் அமேதி தொகுதியைச் சேர்ந்த சந்தெரியா கிராமத்தில் அரசு கோசாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அதை அப்பகுதி பொறுப்பு அதிகாரி திடீரென ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள பசுக்களுக்கு போதிய தீவனம் வழங்கப்படாமல் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக பொறுப்பு அதிகாரி அளித்த அறிக்கையின் பேரில் பஞ்சாயத்து வளர்ச்சி உதவி அதிகாரி, தீனதயாள் துபே, சந்தெரியா கிராமத் தலைவர் முகமது துபெல் ஆகியோர் மீது, பிராணி வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய அமேதி கலெக்டர் ராகேஷ் குமார் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.


மாஜி முதல்வரை விமர்சித்த நடிகை கைதுமும்பை,-தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பற்றி, சமூக வலைதளத்தில் தரக்குறைவாக விமர்சித்த மராத்தி மொழி நடிகை கேதகி சிதலே கைது செய்யப்பட்டார். மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மராத்தி மொழி நடிகை கேதகி சிதலே, சமூக வலைதளம் ஒன்றில் வெளியிட்ட பதிவில், தேசியவாத காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான சரத் பவாரை காட்டமாக விமர்சித்திருந்தார்அப்பதிவில், 'நீங்கள்

பிராமணர்களை வெறுக்கிறீர்கள்; உங்களுக்கு நரகம் காத்திருக்கிறது' எனக் கூறியிருந்தார். இது, தேசியவாத காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இது பற்றி கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகையில், 'சரத் பவார் எங்களுக்கு தந்தை போன்றவர். அவரை விமர்சிப்பதை ஒரு நாளும் பொறுத்துக் கொள்ள முடியாது. 'ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வின் துாண்டுதல்படி தான், பவாரை கேதகி சிதலே விமர்சித்துள்ளார். அவர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.இதையடுத்து, நடிகை கேதகி சிதலே மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை நேற்று மாலை கைது செய்தனர்.


100 பெண்களிடம் வேட்டை நடத்திய மோசடி பேர்வழி கைது


புதுடில்லி-நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கோடிக்கணக்கில் பணமோசடி செய்த வாலிபர், டில்லி நட்சத்திர ஹோட்டலில் போலீசாரிடம் சிக்கினார்.

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பர்கான் தசீர்கானுக்கு, 35, திருமணம் ஆகி 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த இவர், தன் தாய்க்கு ஏற்பட்ட புற்றுநோய் சிகிச்சைக்காக ஏராளமாக செலவு செய்து கடனாளி ஆனார்.இதனால் அதிக பணம் சம்பாதிக்க திட்டமிட்டு, திருமண இணையதளத்தில் விளம்பரம் செய்தார். அதில், ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் இன்ஜினியர் என்று தன்னை குறிப்பிட்டு இருந்தார். இந்த விளம்பரத்தைப் பார்த்த பல பெண்கள் தசீர்கானை தொடர்பு கொண்டனர்.அவர்களைச் சந்திக்க, விலை உயர்ந்த காரில், டிப் - டாப்பாக உடையணிந்து சென்றுள்ளார். அவரது தோரணையை பார்த்து ஏமாந்த பெண்களிடம் தொழிலை விரிவுபடுத்த வேண்டும் எனக்கூறி, பணம் கறந்துள்ளார்.

இப்படி, கர்நாடகா, உத்தர பிரதேசம், பீஹார், மேற்கு வங்கம், குஜராத், பஞ்சாப், மஹாராஷ்டிரா, ஒடிசா டில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்துள்ளார்.இவரிடம் சிக்கி 15 லட்சம் ரூபாயை இழந்த டில்லி 'எய்ம்ஸ்' மருத்துவமனையின் பெண் டாக்டர் ஒருவர், டில்லி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி, டில்லியில் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த தசீர்கானை கைது செய்தனர். விசாரணையில் 100க்கும் மேற்பட்ட பெண்களிடம், கோடிக்கணக்கில் பணம் சுருட்டியதை ஒப்புக் கொண்டார்.அவரிடம் இருந்த பி.எம்.டபிள்யூ., கார், விலை உயர்ந்த மொபைல் போன், ஒன்பது ஏ.டி.எம்., கார்டுகள், விலை உயர்ந்த வாட்சுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணை தொடர்ந்து நடக்கிறதுதமிழக நிகழ்வுகள்.
மின்சாரம் தாக்கி டிரைவர் பலிசங்கராபுரம், : சங்கராபுரத்தில் மின்சாரம் தாக்கி நெல் அறுவடை இயந்திர டிரைவர் இறந்தார்.கல்வராயன்மலை வெதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் தீர்த்தமலை, 26; நெல் அறுவடை இயந்திர டிரைவர். திருமணமானவர். நேற்று மாலை தீர்த்தமலை நெல் அறுவடை இயந்திரத்தை, பூட்டை ரோடில் உள்ள தனியார் வாட்டர் சர்வீஸ் சென்டரில் வாட்டர் சர்வீஸ் செய்தார். அப்போது, மின்சாரம் தாக்கியது.உடன், சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே தீர்த்தமலை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.சங்கராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.latest tamil news
வில்லியனூர் அருகே வாலிபருக்கு வெட்டு; கொத்தனார் கைது
வில்லியனுார்: வில்லியனுார் அருகே, நண்பரின் தந்தையை தாக்கியது குறித்து நியாயம் கேட்கச் சென்ற இளைஞரை சரமாரியாக வெட்டிய கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.வில்லியனுார் அருகே உள்ள முத்துப்பிள்ளை பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவரிடம், அரும்பார்த்தபுரம் எழில் நகரை சேர்ந்த கொத்தனார்

தங்கப்பராஜன்(34) வீடுகட்டும் வேலை செய்து வந்தார்.வீடு வேலை முடிந்த நிலையில், மீதம் இருந்த ஜல்லி மற்றும் மணல் ஆகியவற்றை விலைக்கு கேட்டுள்ளார் தங்கப்பராஜன். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தங்கப்பராஜன், ராஜசேகரை தாக்கினார்.இது குறித்து ராஜசேகர், தனது மகன் லோகேஷிடம் தெரிவித்துள்ளார். பாலிக்டெக்னிக் கல்லுாரியில் படித்து வரும் லோகேஷ், தனது நண்பர் கோபாலன்கடையை சேர்ந்த லோகேஷ்வரன், 21, என்பவரை அழைத்துக் கொண்டு இரவு 10:00 மணியளவில் கொத்தனார் வீட்டிற்கு சென்றார்.

அங்கு தங்கப்பராஜை இருவரும் தாக்கினர். கோபமடைந்த தங்கப்பராஜ், வீட்டிற்குள் சென்று, கத்தியை எடுத்து வந்ததை கண்டு இருவரும் தப்பி ஓடினர்.அப்போது தவறி விழுந்த லோகேஷ்வரன் தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக கொத்தனார் வெட்டினார். ரத்த வெள்ளத்தில் மயங்கிய லோகேஷ்வரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஜிப்மரில் சேர்த்தனர்.புகாரின் பேரில் வில்லியனுார் உதவி சப் இன்ஸ்பெக்டர் தணிகாச்சலம் வழக்கு பதிந்து, கொத்தனார் தங்கப்பராஜை கைது செய்தார்.


டிரைவரிடம் பணம் அபேஸ்: மர்ம நபருக்கு போலீஸ் வலை


விழுப்புரம் : விழுப்புரம் அருகே லாரி டிரைவரிடம் நுாதன முறையில் பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.விக்கிரவாண்டியைச் சேர்ந்தவர் ஜெயமூர்த்திராஜா, 54; லாரி டிரைவர். இவர் தனது மனைவி வங்கி கணக்கு மொபைல் ஆப் மூலம் 10 ஆயிரம் ரூபாயை, கடந்த பிப்ரவரி 16ம் தேதி, தான் கணக்கு வைத்துள்ள வங்கி கணக்கிற்கு மாற்றும் போது அந்த பணம் அவரது கணக்கில் சேரவில்லை.இதையடுத்து அவர், வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு அதன் மூலம் பெற்ற மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர், உங்களுக்கு ஏற்பட்ட பிரச்னையை சரிசெய்ய குயிக் சப்போர்ட் என்ற மொபைல் ஆப்பை பதிவிறக்கம் செய்ய கூறியுள்ளார்

.இதை நம்பி ஜெயமூர்த்திராஜா, அந்த ஆப்பை தனது மொபைலில் பதிவிறக்கம் செய்து அதில் கேட்ட விபரங்களை பதிந்துள்ளார். அடுத்த சில மணி நேரத்தில் அவரது மனைவி வங்கி கணக்கிலிருந்து 59 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்தது.இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.


கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபருக்கு தர்ம அடிவாழப்பாடி--கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபருக்கு தர்ம அடி விழுந்ததால், அவரது உறவினர்கள், வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.

வாழப்பாடியை சேர்ந்தவர் வெற்றி, 25. 'கறி' வியாபாரம் செய்கிறார். இவருக்கும், மற்றொரு கறி வியாபாரியான, வாழப்பாடியை சேர்ந்த, 30 வயது வாலிபருக்கும் பழக்கம் இருந்தது. அந்த வாலிபரின், 20 வயது மனைவிக்கும், வெற்றிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு, அவர்கள் கடந்த, 8ல் வீட்டை விட்டு வெளியேறினர்.

இரு நாளுக்கு முன், வெற்றி, கள்ளக்காதலியுடன், அவரது வீட்டுக்கு வந்தார். இதையறிந்து, நேற்று, பாதிக்கப்பட்ட வாலிபர், அடியாட்களுடன் சென்று, வெற்றியை தாக்கினார். படுகாயமடைந்த அவர், வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெற்றியை தாக்கியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அவரது உறவினர்கள், வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். வெற்றிக்கு ஒரு ஆண் குழந்தையும், பாதிக்கப்பட்டவருக்கு இரு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X