தேனி: உத்தமபாளையம் காமயக்கவுண்டன்பட்டி மந்தையம்மன் கோயில் தெரு சுரேஷ் 38, மகன் மாரீஸ்குமார் 17. சுருளிபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 படித்தார். வயிற்றுவலிக்கு சிகிச்சை பெற்றார். வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழாவிற்காக குடும்பத்தினருடன் தனது தயார் வீடு உள்ள வயல்பட்டிக்கு வந்தனர். அப்போது மாணவருக்கு வயிற்றுவலியுடன் வாந்தி ஏற்பட்டது. தேனி அரசு மருத்துவக்கல்லுாரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.லோடுமேன் பலிதேனி: மதுரை மாவட்டம் கருமாத்துார் மூக்கத்தேவர் தெரு சிவா 53. காமயக்கவுண்டன்பட்டியில் காய்கறி கடை லோடுமேனாக உள்ளார். நேற்று காமயக்கவுண்டன்பட்டி உத்தமுத்து வாய்க்கால் அருகே இறந்து கிடந் தார். உடலின் அருகே மதுபாட்டில், விஷ விதைகள் இருந்தன. கிராம உதவியாளர் தங்கம்மாள் புகாரில் ராயப்பன்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement